இன் நிலையில் விடையம் அறிந்த சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை அணுகி, தற்போது உயிரோடு உள்ள புலிகளின் தலைவர்களைவெளியே எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மைத்திரி பால அரசுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள். எனவே நீங்கள் சொன்னால் அவர்கள் விடுதலை பெறுவார்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை நிராகரித்துவிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை. பிரபல்யமான புலிகளின் தலைவர்கள் விடுதலை பெற்று வெளியே வந்தால் , எமது செல்வாக்கு குறைந்து போய்விடும் என்று கூறியுள்ளார்கள்.
எபுலிகளின் தளபதியின் மனைவி என்ற ஒரே காரணத்தால் தான் ,பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆனந்திக்கு வாக்களித்தார்கள். அதுபோல மேலும் புலிகளின் தலைவர்கள் வந்து அரசியலில் குதித்தால் எமது நிலை என்ன ஆகும் ? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளாராம். இவர்களின் அரசியல் வாழ்க்கைக்காக , தமது உயிர்களை துச்சமென மதித்து களம் புகுந்த புலிகளை இவர்கள் புறக்கணிக்கிறார்கள். என்ன வோட்டு பொறுக்கி அரசியல் இது ? என தமிழ் உணர்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten