தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

நாமலின் தொலைக்காட்சிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி பாவிப்பது போன்ற "ஏர்-போஸ் ஒன்" விமானத்தை இறக்க இருக்க மகிந்த !

[ Feb 01, 2015 04:15:11 PM | வாசித்தோர் : 11850 ]
அமெரிக்க ஜனாதிபதிகள் பாவிக்கும் தனிப்பட்ட விமானம் ஒன்று உள்ளது. இதனை "ஏர் போஸ் ஒன்" (Air force One)என்று கூறுவார்கள். உலகில் உள்ள மிகவும் பாதுகாப்பான விமானம் இதுதான். இந்த விமானத்தினுள் இருந்துகொண்டே , பாதுகாப்பு சபையை இயக்க முடியும் , ஈமெயில் இன்ரர் நெட் வசதிகள் உண்டு. மேலும் ஏவுகணைகளை எதிரி நாட்டின் மீது செலுத்தும் கட்டுப்பாட்டை கூட இந்த விமானம் கொண்டிருக்கும். இதுபோன்ற நவீன வசதிகள் ஏர்-போஸ் ஒன் விமானத்தில் உள்ளது. இதற்கு இணையாக ஒரு விமானத்தை கொள்வனவு செய்ய மகிந்தர் திட்டம் தீட்டி இருந்துள்ளார்.
சுமார் 16 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இதுபோன்ற ஒரு விமானத்தை கொள்வனவு செய்ய அவர் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார். குறித்த விமானம் இந்த மாதம் இலங்கை கொண்டுசெல்லப்பட இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் மகிந்தர் படு தோல்வியை தழுவி வீடு செல்லும் நிலை தோன்றியது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த மைத்திரி , இந்த விமானம் தனக்கு தேவையில்லை என்று அறிவித்துள்ளார். 16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும்.
இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த விமானக்கொள்வனவை நிறுத்தியதுடன் அந்த பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். -
http://www.athirvu.com/newsdetail/2148.html

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கபட்ட சம்பவம்: படங்கள் !

[ Feb 01, 2015 09:12:40 PM | வாசித்தோர் : 3360 ]
தலாவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமை (31) பாய்ந்து காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் சடலமாக இன்று (01) மாலை மீட்கப்பட்டுள்ளார். 20 வயதுடைய மனோஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட நபரை கைது செய்ய முற்பட்ட வேளை பொலிஸாரிடம் இருந்து தப்பிய அவர், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணமல் போயுள்ளார்.
இதனையடுத்து இச் சம்பவத்தினை கண்டித்து நேற்று மாலை தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியை மறித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதும், பிரதேசத்தில் பதற்றநிலை காணப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்ட போதிலும் குறிப்பிட்ட நேரத்தில் அவரை மீட்கவில்லை என கூறி இன்று காலை 10 மணியளவில் மக்கள் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகர மத்தியில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இன் நிலையில் குறித்த இளைஞர் சடலத்தை தற்போது பொலிசார் மீட்டுள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2151.html

நாமலின் தொலைக்காட்சிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது

[ Feb 01, 2015 03:27:37 PM | வாசித்தோர் : 12915 ]
நமால் ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவால் இலங்கையில் நடாத்தப்பட்டு வந்த தொலைக்காட்சி சேவைக்கு ஆப்புவைக்கப்பட்டுள்ளது. கால்டன் ஸ்போட்ஸ் சனல்(CSN) என்னும் தொலைக்காட்சியை இவர்கள் நடத்தி வந்தார்கள். இதில் அதிகமாக இலங்கையில் நடைபெறும் ரக்பி விளையாட்டு மற்றும் கிரிகெட் விளையாட்டுகள் ஒளிபரப்பாகி வந்தது. இலங்கை கிரிகெட் கட்டுப்பாட்டு சபையிடம் இருந்தும் மேலும் இலங்கை தேசிய தொலைக்காட்சியிடம் இருந்தும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது.
பொதுவாக அனைத்து TV சனல்களையும் அழைத்து, ஏலத்தில் இந்த உரிமை விடப்படும். எந்த TV சனல் அதிக பணம் கொடுக்கிறதோ அவர்களுக்கே கிரிகெட் நேரடி ஒளிபரப்பு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு முதல் எந்த ஒரு ஏலமும் நடைபெறாமல் , அடிமாட்டு விலையில் இவர்களுக்கு இந்த உரிமை விற்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்துச் செய்யுமாறு மைத்திரி பால பணித்துள்ளார். இதனால் கால்டன் ஸ்போட்ஸ் TV தனது ஒளிபரப்பு உரிமையை இழக்கவுள்ளது என்ற செய்தி கொழும்பில் இருந்து கசிந்துள்ளது.
மகிந்தரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக TV சனல் தொடக்கம், ஆடம்பர பஸ், ஆடம்பர கார் என்று பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள். இவர்கள் நடத்தி வந்த குறித்த TV சனலால் அவர்களுக்கு கொள்ளை லாபம். ஆனால் இலங்கையின் அரச தொலைக்காட்சிக்கு மில்லியன் ரூபா கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2144.html

Geen opmerkingen:

Een reactie posten