தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு

யாழ். பொலிஸார் மாறிவிட்டார்களா? - ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ!
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 03:31.43 PM GMT ]
யாழில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாழ்ப்பாணப் பொலிஸார் என்றும் இல்லாதவாறு இன்று தங்களுடைய கடமைகளை சரியாக செய்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது.
இதுபற்றித் தெரியவருவதாவது,
யாழ். நகரில் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எவ்வித தேவையற்ற தலையீடுகளிலும் ஈடுபடவில்லை.
மாறாக என்றும் இல்லாதவாறு பொறுப்புடன் வாகன போக்குவரத்தை ஒழுங்கமைத்தும் மக்களது போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தங்களுடைய பணியை மேற்கொண்டனர்.
எனினும் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் போராட்டம் எனின் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருவதும் , போராட்டக்காரர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதி மறுப்பதும் பொலிஸாரது வேலையாக இருந்து வந்தது.
மேலும் பேரணிகளுக்கு தடை விதிப்பது என அவர்களது ஜனநாயக போராட்டமும் நசுக்கப்படும் இதனால் போராட்டங்களை முழுமையாக நடாத்த முடியாது பொலிஸாரின் செயற்பாட்டினால் பாதியில் முடிவடையும்.
இருப்பினும் இன்றைய போராட்ட இடத்தில் வீதிப் போக்குவரத்து பொலிஸார் மட்டுமே நின்றிருந்தனர். இவர்களும் வீதி ஒழுங்கை கண்காணிப்பதில் ஈடுபட்டனர்.
இவர்களின் செயற்பாடு என்றும் இல்லாதவாறு பொலிஸார் செயற்பட்டமை ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ என்றும் அங்கிருந்த பலர் தெரிவித்தனர்.
 
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5H.html
 
 
ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 04:31.48 PM GMT ]
இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு ஆதரவளித்துள்ளன.
ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, குறித்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5I.html

Geen opmerkingen:

Een reactie posten