தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

சர்வதேச விசாரணையில. மட்டுமே தமிழர்கள் நம்பிக்கை கொள்வர்

போர்க்குற்றம்- சாட்சியாளர்களின் தகவல்களை வெளியிட தடை
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 12:33.57 PM GMT ]
இலங்கை சம்பந்தமான போர்க்குற்ற விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டாலும், சாட்சியாளர்கள் தொடர்பான தகவல்களை 2035 ஆம் ஆண்டு வரை வெளியிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இந்த தடையை விதித்துள்ளது.
அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை விசாரணைக்குழு உறைக்குள் இட்டு சீல் வைத்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்ற விசாரணைக்குழுவின் முன் சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் 4ஆயிரம் எழுத்து மூலமான சாட்சியங்கள் முவைக்கப்பட்டிருந்தன.
இதனைத்தவிர இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 5 இலங்கை ஊடகவியலாளர்கள் எழுத்துமூலமான சாட்சிங்களை முன்வைத்துள்ளனர்.
வன்னி இராணுவ நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஆயிரம் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக புலத்தில் உள்ளவர்கள் சாட்சியமளித்துள்ளதாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போர் குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் 10ம் திகதி வெளியிடப்பட உள்ளது.
 
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5B.html
 
 
மகிந்தவை தோற்கடிக்க தயார்: பிரதமர் ரணில்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 01:34.50 PM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தாம் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என தான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் அவரே, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு வழங்கியுள்ளது.
எமது 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு அவர்களுக்கு நன்றி, தேர்தலுக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் சேர்ந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது. இது புதிய முறை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கூச்சலிடும் கூட்டம் ஒன்று உள்ளது. அந்த கூட்டத்தை நுகேகொடை கூட்டம் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5E.html


ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி மாபெரும் பேரணி
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 02:03.48 PM GMT ]
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசாங்கம், அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன.
ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையா நிலையிலேயே மகிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவ்வருட மார்ச் மாதமளவில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை திட்டமிடப்பட்டபடி சமர்ப்பிக்கப்பட இருந்தது.
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் ஆனது ஈழத்தமிழர்களாகிய எமக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போன்ற மிகப் பெரிய வேதனையுடனான ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு-கிழக்கு இராணுவ கட்டமைப்பிலே எதுவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
இராணுவத்தினரின் தலையீடுகள் தமிழர் பிரதேசம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அச்சுறுத்தல், பின்தொடர்வது, கண்காணிப்புக்கள் என இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையை சர்வதேசம் பராமுகப்படுத்துவ தாகவே இவ் விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமையை நாம் நோக்குகிறோம்.
இந்நிலையில் தற்போதைய புதிய அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற உள்ளக விசாரணையானது, குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுவதோடு ஈழத் தமிழர்களாகிய எமக்கு அடிப்படை மனித உரிமை பிரச்சினைகளை நீர்த்;துப் போகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளே அன்றி வேறல்ல.
இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினது உள்ளக விசாரணையில் எமக்கு துளியளவேனும் நம்பிக்கை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு எமது வாழ்நிலைப் பிரச்சினைக்குரிய நீதி கிடைக்க இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் போதிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
இதன் மூலமாக தமிழருக்குரிய நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழி கிடைக்கும் என நாம் நம்புகிறோம். மேலும் ஈழத்தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை அறிக்கையினை விரைவாக வெளியிட வேண்டும் என்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிடம் வலியுறுத்துகின்றோம்.
எனவே தமிழ் மக்களின் உரிமைக் குரலாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24.02.2015 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் எமது நீதிக்கான ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு அமைதி வழியில் முரசறைய அன்றைய தினம் பல்கலை முன்றலில் ஆரம்பமாகும் பேராட்டத்தில் அனைவரும் அணிதிரளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5F.html


சர்வதேச விசாரணையில. மட்டுமே தமிழர்கள் நம்பிக்கை கொள்வர்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 02:32.41 PM GMT ]
ரிஷானா என்ற இலங்கைப் பெண்ணுக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குழந்தைக்குப் பால் பருக்கும் போது புரைக்கேறி குழந்தை இறந்து போனமைக்கு ரிஷானாவே காரணம் என்ற அடிப்படையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குழந்தைக்குப் பால் ஊட்டும் போது ரிஷானா பராயம் அடையாத சிறுமி. அறியாப் பருவம். தவறுதலாக அப்படி நடந்து விட்டது.
எனவே ரிஷானாவைக் காப்பாற்ற வேண்டும் என்று சவூதி மன்னர் முதல் மனித நேய அமைப்புக்கள் வரை கடும் பிரயத்தனம் எடுத்தன.
இருந்தும் சவூதிச் சட்டத்தின் பிரகாரம் ரிஷானாவுக்கு மன்னிப்புக் கொடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே உண்டு.
அந்த அடிப்படையில் இறந்து போன குழந்தையின் பெற்றோர் மட்டுமே ரிஷானாவுக்கு மன்னிப்பு அளிக்க முடியும்.
எனினும் இறந்த குழந்தையின் தாயார், ரிஷானாவுக்கு மன்னிப்புக் கொடுக்க மறுத்து விட்டார். அதன் முடிவு ரிஷானாவின் தலை வெட்டப்பட்டது.
இங்கு மன்னிப்பு வழங்க மறுத்த மனித வன்மம் பற்றி நாம் ஆராயவில்லை. மாறாக பாதிப்படைந்தவரே குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்ற உயர்ந்த சட்ட விதிமுறை பற்றி ஒரு கணம் சிந்திக்கலாம்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் போது அந்தத் தண்டனைக்கு மன்னிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
எனினும் எங்கள் நாட்டில் ஜனாதிபதி நினைத்தால் எந்தக் குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்க முடியும். அந்த அதிகாரத்தின் கீழ்த்தான் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது; �ராணிக்கு மீண்டும் பதவியேற்க சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது.
அதேநேரம், விளக்கம் விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இதுவரை மன்னிப்பு வழங்கப்படவில்லை. இங்கு தான் அதிகாரம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுகின்றது.
சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட வேகம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் மந்தமடைந்து போயிற்று.
இந்த நிலைமையில் வன்னியில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறிய போதிலும் அந்தத் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியிலும் நலினப்படுத்தப்படுகிறது. இலங்கை அரசின் முக்கியஸ்தர்கள் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறுகின்றனர்.
அதேநேரம் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதிலும் பிற்போடல் நடந்துள்ளது.
வன்னிப் போரில் பாதிப்படைந்தவர்கள் தமிழர்கள். மகிந்த ராஜபக்ச� தலைமையிலான இலங்கை அரசு வன்னியில் நடத்திய கொடும் போரில் திட்டமிட்ட தமிழின அழிப்பு அரங்கேறியது.
நிலைமை இதுவாக இருக்கும் போது போர்க்குற்ற விசாரணையை சர்வதேச ரீதியிலா? அல்லது உள்ளக மட்டத்திலா? நடத்துவதென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் போரில் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கே உண்டு.
ஆனால் போர்க்குற்ற விசாரணை உள்ளக மட்டத்தில் நடத்தப்படும் என இன அழிப்புச் செய்ய தரப்பு சொல்கிறது எனில் நீதியை எங்ஙனம் நிலைநாட்ட முடியும்?
இதேபோல் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை பிற்போடுவது என்ற விடயத்தில் ஈழத்தமிழர்களின் கருத்துப் பதிவு செய்யப்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை என்பது பதிலாயின் ஐ.நா சபையும் பக்கச் சார்பு கொண்டதா? என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
எனவே போர்க்குற்றம் தொடர்பில் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அது விடயத்தில் தீர்மானம் எடுக்கும் தகைமை போரினால் பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கே உண்டு. ஆக, இது விடயத்தில் வேறு எவரும் கதைப்பது பொருத்தப்பாடாகாது.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5G.html

Geen opmerkingen:

Een reactie posten