தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

பலர் செய்த உயிர்த் தியாகங்களே தாய்மொழி தினம் கொண்டாடக் காரணம்: கே.வரதராஜன்

ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு பிரித்தானியா உட்பட சில நாடுகள் ஆதரவு
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 04:31.48 PM GMT ]
இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு ஆதரவளித்துள்ளன.

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, குறித்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் லோரா, சிறிலங்காவின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவதில் அக்கறை செலுத்தி வருவது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்கா குறித்த போர் குற்ற விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை வழங்கியவர்கள் குறித்த அறிக்கை வெளிவராததையிட்டு கவலையடைந்துள்ள போதிலும், குறித்த தீர்மானம் சரியானது என்பதை கூறிக்கொள்ள தான் விரும்புவதாகவும் லோரா மேலும் தெரிவித்துள்ளார். 
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5I.html

பலர் செய்த உயிர்த் தியாகங்களே தாய்மொழி தினம் கொண்டாடக் காரணம்: கே.வரதராஜன்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 05:05.01 PM GMT ]
முள்ளிவாய்க்கால் பேரழிவினை இந்தநாட்டின் பேரினவாதிகள் சிலர், ஏதோ அரக்கர்களை கொன்றழித்தவர்கள் போன்று கடந்த ஆண்டு வரை சுதந்திர தின விழாவினை கொண்டாடி மகிழ்ந்தார்கள் என கல்முனை வலயத்தின் தமிழ்ப் பிரிவிற்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.வரதராஜன் கூறினார்.
இன்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் சர்வதேச தமிழ் மொழி விழா நிகழ்வுகள் கல்லூரி பிதா பிறையினர் செலர் தலைமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு, தமிழ் பிரிவிற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் கே.வரதராஜன், கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன், மற்றும் கல்லூரி பிரதி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய உதவிக் கல்வி பணிப்பாளர்,
இந்த நாள் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் அதுதான் 1952.02.21 ஆம் திகதி நடந்த படுகொலைகளின் நிகழ்வாக 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று யாரோ செய்த உயிர்த்தியாகங்களின் மூலம் இன்று நாம் சர்வதேச ரீதியில் தாய்மொழி தினத்தினை கொண்டாடுகின்றோம்.
தற்போது வடகிழக்கு மக்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு போராடிக் கொண்டிருப்பதனைப்போன்று, அன்று கிழக்கு பாகிஸ்தானிய மக்களும் தமது வங்கமொழிக்கு அந்தஸ்த்து கிடைக்க வேண்டும் என்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்நாட்டு பொலிசார் அவர்களை< நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து சுட்டு வீழ்த்தினார்கள்.
அன்று நடந்த அந்த துக்ககரமான சம்பவத்தின் எதிரொலியே இன்று நாம் சர்வதேசத்தில் தாய்மொழி தினத்தினை கொண்டாட வாய்ப்புக் கிடைத்தது.
இன்று உலகலாவிய ரீதியில் 7000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்தபோதும் ஆறு மொழிகளே செம்மொழி அந்தஸ்த்தினை பெற்றிருக்கின்றது. அதில் ஒன்றுதான் எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும்.
முன்னைய தலைமுறை எடுத்த அதீத முயற்சியின் பயனாக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பாரத தேசத்திலே தமிழ்மொழி செம்மொழியாக பிரகடனப்படுத்தப் பட்டிருக்கின்றது. இதன்மூலம் தமிழ்மொழியின் சிறப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr5J.html


Geen opmerkingen:

Een reactie posten