பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி! இலங்கையர் பற்றிய தகவல்களை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:11.44 PM GMT ]
இந்தியாவில் காணப்படும் அமெரிக்க இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இலங்கையர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவரின் ஒத்துழைப்புடன் இந்த தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாஹிர் ஹுசெய்ன் என்ற இலங்கை நபர் பாகிஸ்தான் அதிகாரிகளுடனும் ஏனைய தரப்பினருடனும் பேணிய மின்னஞ்சல் தொடர்பாடல் பற்றிய விபரங்களை அமெரிக்கா, இந்தியாவிடம் வழங்கியுள்ளது.
தாக்குதல் முயற்சி குறித்த விசாரணைகளை சரியான முறையில் முன்னெடுக்க எதுவம் வகையில் இவ்வாறு தகவலகள் வழங்கப்பட்டுள்ளன.
தாக்குதல் முயற்சி குறித்த இலங்கையிடமிருந்தும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKdnoz.html
Geen opmerkingen:
Een reactie posten