தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி! இலங்கையர் பற்றிய தகவல்களை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்கா

போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் அவசியம்: பான் கீ மூன்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:08.41 PM GMT ]
இலங்கையின் போர் தொடர்பில் நம்பிக்கையான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 
இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச நியமத்தில் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயலாளரின் அலுவலக பேச்சாளர் எரிக் கானெக்கோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போர் விடயத்தில் பொறுப்புக்கூறல் என்ற அம்சத்துடன் சமாதானம் உட்பட்ட ஜனநாயக விடயங்களிலும் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என்றும் பான் கீ மூன் கருத்துரைத்துள்ளதாக எரிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKdnoy.html
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்காக 35 லட்சம் ரூபாவை செலவிட்ட மீரிகம பிரதேச சபை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:28.56 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக, மீரிகம பிரதேச சபை  35 லட்ச ரூபா பணம் செலவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
35 லட்சம் ரூபாவிற்கு மஹிந்தவின் உருவப் படத்தை அச்சிட்டு அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உரிய விலை மனுக் கோரல் விதிமுறைகள் பின்பற்றப்படாது அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் எனவும் பொது நிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அப்பியாசக் கொப்பி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKdno0.html

பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி! இலங்கையர் பற்றிய தகவல்களை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:11.44 PM GMT ]
பயங்கரவாத தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடைய இலங்கையர் பற்றிய தகவல்களை அமெரிக்கா, இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
இந்தியால் காணப்படும் அமெரிக்க இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இலங்கையர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவரின் ஒத்துழைப்புடன் இந்த தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாஹிர் ஹுசெய்ன் என்ற இலங்கை நபர் பாகிஸ்தான் அதிகாரிகளுடனும் ஏனைய தரப்பினருடனும் பேணிய மின்னஞ்சல் தொடர்பாடல் பற்றிய விபரங்களை அமெரிக்கா, இந்தியாவிடம் வழங்கியுள்ளது.
தாக்குதல் முயற்சி குறித்த விசாரணைகளை சரியான முறையில் முன்னெடுக்க எதுவம் வகையில் இவ்வாறு தகவலகள் வழங்கப்பட்டுள்ளன.
தாக்குதல் முயற்சி குறித்த இலங்கையிடமிருந்தும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKdnoz.html

Geen opmerkingen:

Een reactie posten