தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்பிப்பு : மாற்றமில்லை : ஐ.நா உறுதி



வாகரை மக்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட யோகேஸ்வரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 04:33.00 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பால்சேனை நாகபுரம் கிராமத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மக்கள் சந்திப்பின் பொருட்டு நேற்று விஜயம் செய்தார்.
இந்நிகழ்வின் போது பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கிராம மக்கள் பலர் தமது கிராமத்தின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்.
இன்று வரை வீடு இல்லாத நிலையில் மிகுந்த கஷ்ட நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு இந்திய வீடு உட்பட எதுவித வீட்டு திட்டமும் வழங்கப்படாமை குறித்தும் அத்தோடு கணவனை இழந்த விதவைகள், யுத்தத்தால் அங்கவீனரானவர்கள் போன்றோரின் சுயதொழிலுக்கு உதவுமாறும், வேலையின்றி பல கல்வி கற்ற இளைஞர் யுவதிகள் உள்ளதால் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு உதவி கோரினர்.
விவசாய நடவடிக்கைகளுக்கான உதவி உட்பட பல விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அத்தோடு தங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் வீட்டில் வாழ முடியாத நிலை உள்ளமையையும் சுட்டிக்காட்டியதுடன், தங்கள் பகுதிக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அலியா வோட் தங்கள் பகுதிக்கு பிரயோசனப்படாது சிலரின் உழைப்பாக பயன்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
தாங்கள் மீள்குடியேற்றப்பட்டும் அதற்கான வீடுகள் மிகக் குறைவாகவே தங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினர். இக்கிராமம் கடந்த கால யுத்த சூழலாலும், சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மீள் குடியேற்றத்துக்கான வீடுகள், மலசல கூடங்கள் முற்று முழுதாக வழங்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
சகல விடயங்களையும் அவதானமாக கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பதில்களை வழங்கி வைத்ததுடன், இயன்ற வரை உதவுவதாக மக்களிடம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeo4.html

சீகிரிய சுவரில் பெயர் பதித்த மட்டக்களப்பு பெண் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 04:58.05 AM GMT ]
சீகிரிய குன்றில் உள்ள பளிங்கு சுவரின் கவிதைகளை சேதப்படுத்தியதாக தெரிவித்து மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 27 வயதான யுவதி ஒருவர் தொல்பொருளியல் உத்தியோகஸ்த்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து சுற்றுலா சென்ற யுவதி ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுவரில் அவரின் பெயரையும், நன்றி என்ற வார்த்தையையும் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பெண் சீகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐயாயிரம் பேருக்கு சலுகை வட்டியில் வீட்டு கடன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 05:06.04 AM GMT ]
ஒரு தேர்தல் தொகுதியில் 30 பேரை தெரிவு செய்து ஐயாயிரம் 75 ஆயிரம் ரூபா வீதம் கடன் உதவி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மனதுக்கு நிம்மதி தங்குவதற்கு இடம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இக்கடன் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீடு மற்றும் சமுர்த்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அரசாங்கத்தின் அனுசரனையில் 55 ஆயிரம் வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் சமுர்த்தி சமூக ஒன்றியத்தை மறுசீரமைப்பதற்கும் குறித்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை தெரிவு செய்து குறைந்த வட்டியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குவதற்கு வீடு மற்றும் சமுர்த்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் அமையப்போகும் அரசாங்கம் பற்றிக் கூறும் அனுர
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 05:32.14 AM GMT ]
மக்கள் விடுதலை முன்னணியின் இலக்கு 2020ஆம் ஆண்டில், நாட்டில் வேலை செய்யும் மக்கள் மற்றும் குறைந்த வர்க்கம் அதிகாரத்தில் இருந்து ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும் அதற்கான தலைமைத்துவத்தை மக்கள் விடுதலை முன்னணி வழங்குவதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலம் மாற்றம் மற்றும் மக்கள் சவால் என்ற தலைப்பில் காலி நகர மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எமக்கு இருப்பது நீண்ட தூர ஓட்ட பயணம்.
நான்கு வருடங்களின் பின்னர் எதிர்வரும் தேர்தலில் அக்கால அரசியலமைப்பே காணப்படும்.
ஊழல் மோசடிகள் திருடர்களை பிடித்துக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை.
2020 ஆம் ஆண்டு இடம் பெறும் தேர்தலில் நாங்கள் பலத்தை பெற வேண்டும்.
சமூக மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் இருக்க வேண்டும்.
நாட்டில் நிலையான வெற்றியை பெற்றுத் தரக்கூடிய சமூகம், பொருளாதாரம் என்ற ரீதியில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய முன்னணியாகவும், வேலை செய்யும் மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் அரசாங்கத்தையும் உருவாக்குவோம்.
அக்கட்சியானது அறிஞர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், மற்றும் வேலை செய்யும் மக்களை கொண்டதாகும்.
அக்கட்சியானது விரிவாக்கமடைந்த முன்னணியாகவும் 2020 ஆம் ஆண்டில் அதிகாரத்தை மாற்றக்கூடிய முன்னணியாகவும் காணப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdepy.html

புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசபைக்கான தேர்தல் - 25ம் திகதி வாக்களிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 06:13.52 AM GMT ]
முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 2011 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகளும் சுயாதீன கட்சிகளும் காணப்படுவதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்பிப்பு : மாற்றமில்லை : ஐ.நா உறுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 06:26.35 AM GMT ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கையை சமர்பிப்பதில் எந்தவித மாற்றங்களும் இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ் விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
யுத்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிப்பதை தள்ளிப்போடுமாறு இலங்கை அரசாங்கம் கோரி வருகின்றது.
இந்நிலையில் இவ் அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும்,
எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை குறித்து அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது 28வது அமர்வில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து ஆராய்ந்து 28வது அமர்வின் போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு,
இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவீ.பிள்ளை சர்வதேச விசாரணைக்குழுவொன்றை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdep2.html

Geen opmerkingen:

Een reactie posten