[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 04:44.44 AM GMT ]
எந்த சூழ்நிலையிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் கட்சி உறுப்பினர்களை கைவிட்டு செல்ல மாட்டேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளருக்கு மகிந்த அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்திற்கு மகிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
அத்தியாவசிய கடமைகள் பலவற்றினால் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதியினால் கட்சி செயலாளருக்கு கடிதம் மூலம் மகிந்த ராஜபக்ச தெரியபடுத்தியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலவீனமாவதற்கான காரணம் கட்சிக்குள் இருந்த ஒற்றுமை உடைந்தமையே எனவும் கடந்த கால அனுபவங்கள் மூலம் புரிந்துகொள்ள கூடியதாக இருந்ததாகவும் அவர் மேலும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeo5.html
ஜனாதிபதி மைதிரியின் வருகையை எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 05:48.32 AM GMT ]
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdep0.html
Geen opmerkingen:
Een reactie posten