தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

ஐ.நா விசாரணை அறிக்கை விவகாரம்! கைவிரித்தார் பான் கீ மூன்!

அமைச்சு வாகனங்களை பகிர்வதில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாடு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:22.29 AM GMT ]
அமைச்சு வாகளங்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை வள அமைச்சின் பொறுப்புக்கள் இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் பகிரப்பட்டுள்ளது.
பழனி திகாம்பரம் மற்றும் பீ. ஹரீசன் ஆகிய இருவருக்கும் இந்த அமைச்சுப் பொறுப்பு பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த அமைச்சின் பொறுப்புக்களை ஆறுமுகன் தொண்டமான் வகித்து வந்தார்.
அமைச்சின் சொகுசு ரக வாகனங்கள் அனைத்தையும் அமைச்சர் ஹரிசனும் அவரது அதிகாரிகளும் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் முறைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


பசில் ராஜபக்ச என்னை ஓரம் கட்ட முயற்சித்தார்!– சஜின் வாஸ் குணவர்தன
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:13.47 AM GMT ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, தம்மை ஓரம் கட்ட முயற்சித்தார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவ பெசில் ராஜபக்சவும் ஓர் காரணமாகும்.
முழுப் பிழையையும் அவர் மீதே சுமத்திவிட முடியாது. பசில் ராஜபக்ச என்னுடன் கோபித்துக் கொண்டிருந்தார்.
எனது விபரங்களை என் பற்றி செய்திகளை அரச ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் குறித்து நான் தனியான செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெளிவுபடுத்துகின்றேன்.
என்னிடம் உலங்கு வானூர்தி உண்டு. உலங்கு வானூர்தி வைத்திருப்பது அவ்வளவு பெரிய விடயமல்ல.
50 மில்லியன் கொடுத்து உலங்கு வானூர்தி வாங்கினேன். சிலர் 40 மில்லியன் பெறுமதியான வாகனங்களை வைத்திருக்கின்றார்கள்.
நான் ஒரு வர்த்தகர், வங்கிக் கடன் பெற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் பலப்பிட்டியவில் போட்டியிடுவேன் மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என அவர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfq6.html

ஐ.நா விசாரணை அறிக்கை விவகாரம்! கைவிரித்தார் பான் கீ மூன்!
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:58.58 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதப்படுத்துவது தனது கையில் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கைவிரித்து விட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையைப் பிற்போடும்படி, சிறிலங்கா அரசாங்கம் கோரி வருகிறது.
நேற்று நியூயோர்க்கில் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடும் தமது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளியிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்த விருப்பத்தை வெளியிட்டது தொடர்பாக ஐ.நாவின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் எதுவும் கூறப்படவில்லை.
ஆனால், மூடப்பட்ட அறைக்குள் பான் கீ மூனுடன் நடத்திய சந்திப்பில், அறிக்கையைப் பிற்போடுவதன் அவசியத்தை மங்கள சமரவீர வலியுறுத்தியதாக, தம்மை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
ஆனால், இது தனது விவகாரம் அல்லவென்றும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஐ.நா அறிக்கையைத் தாமதப்படுத்துவதற்கு, ஐ.நா மற்றும் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கே , மங்கள சமரவீர தனது அமெரிக்கப் பயணத்தை, பயன்படுத்தியுள்ளார் என்றும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfry.html


Geen opmerkingen:

Een reactie posten