[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:45.48 PM GMT ]
கொழும்பு, ரமதா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பைசர் முஸ்தபாவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சின் கீழ் வந்த பல நிறுவனங்கள் அமைச்சர் அர்ஜுனவின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னணியிலேயே பைசர் முஸ்தபா பதவி விலகியதாக சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தமது அமைப்பு பைசர் முஸ்தபாவின் தலைமையின் கீழ் கடந்த இரு வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம். மன்சில், குருநாகல் நகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார் மற்றும் கொலன்னாவை நகர சபை உறுப்பினரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfq2.html
அசாத் சாலியின் கருத்துக்கு பொதுபல சேனா கண்டனம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:07.23 AM GMT ]
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில், இலங்கை முஸ்லிம்களை சர்வதேசப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஞானசார தேரர் மற்றும் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பளித்து பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு கண்டித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தான் வெளியிடாத ஒருகருத்தை, முஸ்லிம்கள் மத்தியில் இன வாதம் மற்றும் மத வாதம் என்பவற்றைத் தூண்டி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வரும் அரசியல்வாதியான அசாத் சாலி தெரிவித்துள்ளார். இவரது கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தொடர்ந்தும் பொய்யான அறிக்கை விட்டு இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றார். நான் சொல்லாத ஒரு செய்தியை தெரிவித்ததாக கூறி, பௌத்த, முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, எதிர்வரும் தேர்தலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் வெட்கம் கெட்ட ஒரு முயற்சியாகவே இதனை சாதாரண அறிவுள்ள ஒரு முஸ்லிமும் புரிந்துகொள்வார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித அறிவித்தலும் எம்மாள் விடுக்கப்படவில்லை. மூளையுள்ள எவரும் இது தொடர்பில் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள முடியும். பொலிஸுக்கோ அல்லது தேவையான எவருக்கும் இது குறித்து பார்த்து அறிந்துகொள்ள முடியும்.
சிங்கள பௌத்த மக்களின் பாதுகாப்பு, இருப்பு தொடர்பிலும் குறிப்பாக, மதவாத மற்றும் இனவாத பயங்கரவாதத்திலிருந்து எமது தாய் நாட்டை காப்பதற்குத் தேவையான எந்தவொரு நீதியான போராட்டமொன்றை முன்னெடுக்க நாம் பயப்பட மாட்டோம் எனவும் அந்த அறிக்கையில் பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
10வது நாளாக ஐ நா நோக்கித் தொடரும் விடுதலைச்சுடர் போராட்டம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:48.59 AM GMT ]
சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் 10வது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பெப்ரவரி 4ம் நாள் புதன்கிழமை 10, Downing Street முன்பாக ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் பெப்ரவரி 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை 10ஆவது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டமானது காலை 10.00 மணிக்கு தென்மேற்கு லண்டன் New Malden என்னும் இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
பத்தாம் நாள் போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்களுடன், திரு குணபாலசிங்கம் சுபராஜ் அவர்கள் விடுதலைச்சுடரையும், திரு குமார் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் ஏந்தியவாறு செல்ல, நிரஞ்சன், செல்வன், ஞானசிகாமணி, கோமதி ஆகியோரும் ஒன்றுகூடி முன்னெடுக்கப்பட்ட போராட்டம், New Malden பகுதியின் பல இடங்களூடாகத் தொடரப்பட்ட பொழுது, ஆங்காங்கே சந்தித்த மக்களிடம் சிறுவெளியீடுகளும் கையளிக்கப்பட்டன. பின்னர் Wimbledon, Tootting , Mitcham, Wandsworth ஆகிய இடங்களூடாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது Wimbledon பகுதிக்கான Conservative கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு Stephen Hammond அவர்களிடமும் Tooting பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Labour கட்சியைச் சார்ந்த திரு Sadiq Aman Khan அவர்களிடமும் Streatham பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Labour கட்சியைச் சார்ந்த திரு Chuka Harrison Umunna ஆகியோரிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட 10ம் நாள் விடுதலைச்சுடர் பயணமானது Wandsworth Town Centre இல் நிறைவடைந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfq5.html
Geen opmerkingen:
Een reactie posten