தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

தமிழ் இனத்தின் காவலன் பாலசிங்கத்தை விமர்சனம் செய்வதற்கு கிழக்கு முதல்வருக்கு தகுதி உண்டா?: கலையரசன் மா.உ சீற்றம்



தமிழ் பேசும் சமூகம் என்றே, மறைந்த எம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உச்சரித்தாரே தவிர தமிழ், முஸ்லிம் என்று பிரித்து எந்த பேச்சு மேசையிலும் உச்சரிக்கவில்லை....
அன்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த ஊடகவியலாளரால் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட வினாவிற்கு கூறிய பதில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமதிப்பதுடன் இன்றைய சூழலில் பொருத்தமற்ற செயல். இப்படிப்பட்ட கூற்றுக்களை பதவி ஏற்றவுடன் கூறுவது சாலச் சிறந்ததல்ல என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்

இதனை அறியாமல் கிழக்கு முதல்வர் விமர்சித்தமை தமிழர் மனதை புன்படுத்தும் செயல் என கிழக்கு மாகான சபை உறுப்பினர் த.கலையரசன் கவலை விடுத்துள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகளின் பெறுமதியினை பற்றி தர்க்கா நகர் தாக்கப்பட்போது உலகத்திற்கே எடுத்துக்கூறியிருந்தார்கள் விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்காது என்று. இது இவருக்கு ஞாபகத்தில் இல்லையா? அல்லது ஞாபகம் இருந்தும் இல்லாதவர் போன்று செயற்பட நினைக்கின்றாரா?
முஸ்லிம் மக்களது பேரவலம் கட்டவிழ்த்தப்பட்டிருக்கின்றது என்றால் அது 2009க்கு பிற்பாடே காலப்பகுதியிலே. விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு தர்க்கா நகர்போன்ற அழிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதனை முதலமைச்சர் முதலில் புரிந்து செயற்பட வேண்டும்.
தான் பதவியேற்று ஒரு சில நாட்களுக்குள் தமிழ்மக்களையும் உலகத்தமிழர்கள் மனங்களையும் புண்படுத்தும் வார்த்ததைகளை பிரயோகிப்பது தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தம் உள்நோக்கமா என்ற கேள்வியினையும் கேட்கவேண்டி இருக்கின்றது.
அன்று தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சென்று தங்களது நிலைமைகளை சொல்லி சமாதான செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தியது மாத்திரமல்லது, அன்று சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டு வீச்சு விமானம் மூலம் குண்டு வீசி கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு பாராளுமன்றத்தில் இரங்கல் உரையினை ரவூப் ஹக்கீம் ஆற்றியதனை, இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் மறந்து விட்டாரா? அன்று போற்றிப்பேசியவர்கள் இன்று அவர்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்துவது தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என்பதனை ஒருகணம் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக இவரது நடவடிக்கை தொடருமாக இருந்தால் நாமும் எமது அடுத்தகட்ட நிலமைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கும். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் தொண்மையும் பழமையும் வாய்ந்த ஒரு மாவட்டம் போராட்ட காலத்தில் போராட்டத்திற்கென்று வலுச்சேர்த்த மாவட்டம்.
அதனடிப்படையில் விடுதலைப்புலிகளில் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தினை அவமதித்த செயலானது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அவமதித்த செயலாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdet1.html

Geen opmerkingen:

Een reactie posten