தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

முன்னாள் புலிகளின் அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படுகிறது?

இலங்கை வெளியுறவு அமைச்சரின் எக்ஸ்பிரஸ் பயணங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 03:30.08 PM GMT ]
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுக்கவும் சர்வதேசத்தின் அழுத்தங்களையும் குறைக்கும் வகையிலும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தவும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு சென்றிருந்த அவர் இலங்கைக்கு ஆதரவு தேடும் பணிகளை அங்கு முன்னெடுத்தார்.
இதன் பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற அவர், அங்கு ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான பிரதிநிதி சமந்தா பவரை சந்தித்தார்.
இதனையடுத்து தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான உதவி பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் தூதுவரான மிச்செய்ல் சிசன் மற்றும் கென்னத் ரொஸ், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர், ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரை சந்தித்தார்.
அதேநேரம், அமெரிக்காவில் இருந்தவாறே அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இந்தநிலையில் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் இணைந்துக்கொண்டார்.
இதனையடுத்து மங்கள சமரவீர, எதிர்வரும் 27ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் வருகையுடன் சீனாவுடன் ஏற்பட்டுள்ள உறவுத்தேக்கம் குறித்து பேசவே அவர் அங்கு செல்கிறார்.
அங்கிருந்து ஜெனீவா செல்லும் அவர், மார்ச் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் அமர்வில் பங்கேற்பற்காக ஜெனீவாவுக்கு செல்லவுள்ளார். அங்கு அவர் மனித உரிமைகள் ஆணையாளர் செயட் ராட் அல் ஹூசைனை சந்திக்கவுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdet4.html

காணாமல் போனோர் ஆணைக்குழு ஆலோசகர்களுக்கு எவ்வித பணிகளும் இன்றி பெருமளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 03:55.10 PM GMT ]
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு பல மில்லியன் ரூபாய்கள் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை சேர்ந்த சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர் ஜியோப்ரி நைஸ், ரொட்னி டிக்சன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் எம் க்ரேன் ஆகியோர் இந்த ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நான்கு பேருக்கும் அவர்கள் நியமனம் பெற்று 7 மாதங்களுக்குள் 135 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த கொடுப்பனவு அமைச்சரவையின் அனுமதியில்லாமல் நேரடியாக மத்திய வங்கியினால் செலுத்தப்பட்டுள்ளன.
எனினும் இந்த நால்வரில் இருவரை மாத்திரமே தாம் சந்தித்துள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர்களில் எவரும் காணாமல் போனோர் தொடர்பான வாக்குமூல அமர்வுகள் எவற்றிலும் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த இருவரும் சுயமாகவே முல்லைத்தீவுக்கும் கிளிநொச்சிக்கும் கடந்த டிசம்பர் 8ஆம் 9ஆம் திகதிகளில் விஜயம் செய்தனர்.

இதன்போது அவர்களின் தங்குமிடங்கள் மற்றும் உணவுகளுக்காக மாத்திரம் 598,336 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில்,  சேர் டெஸ்மன்ட் டி சில்வா 79 மில்லியன் ரூபாய்களையும் ரொட்னி டிக்சன் 5, 727,522.84 ரூபாய்களையும், டேவிட் எம் க்ரேன் 7,814,261.50 ரூபாய்களையும் பெற்றுள்ளனர்.
இதனை தவிர, ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்காத பி பி மயில்வாகனம் என்பவருக்கு 20,705,542 ரூபாய்களும், மேஜர் ஜெனரல் ஜே டி ஹோம்ஸ_க்கு 4,332,910.50 ரூபாய்களும், மனித உரிமைகள் நிறுவனங்களின் குழுமத்துக்கு 3,735,000 ரூபாய்களும் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சேர் ஜியோப்ரி நைஸூக்கும் அவரின் பாரியாருக்கும் 18,060,558.98 ரூபாய்கள் செலுத்தப்பட்டன.
வெறுமனே நாட்டுக்கு எவ்வித பயன்களும் இன்றி, இந்தளவு பணம் செலவிடப்பட்டமையை இன்று வெளியாகியுள்ள ஆங்கில செய்தித்தாள் ஒன்று  கடுமையாக விமர்சித்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdet5.html

முன்னாள் புலிகளின் அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படுகிறது?
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 04:13.52 PM GMT ]
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இணைந்து அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த முனைப்புக்கு பின்னால் உதயன் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் இருப்பதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இந்த முனைப்புக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.
இது, ஜே.வி.பியை போன்று இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு வந்த குழுவாக அமையும் என்று ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdet6.html


Geen opmerkingen:

Een reactie posten