தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

முன்னாள் இராணுவத் தளபதி நாட்டைவிட்டு வெளியேறுவார்? சோதிடர் எதிர்வுகூறல்

முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் இன்னும் மூன்று ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுவார் என இலங்கையின் பிரபல சோதிடர் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் என பல சோதிடர்கள் எதிர்வுகூறிய போது, மகிந்த ராஜபக்ச தோல்வியடைவது நிச்சயம் என தொட்டவத்த திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
மகிந்த தோல்வியடைந்து மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த சோதிடர் நாட்டில் ஒரு பிரலமிக்க நபராக மாறியுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற தொட்டவத்த எதிர்காலத்தில் இடம்பெற போகும் சம்பவங்கள் தொடர்பாக எதிர்கூறலை வெளியிட்டுள்ளார்.
2016 மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் பிடல் கஸ்ரோ இறந்து போவார். இலங்கை தொடர்பாக இரண்டு எதிர்கூறல்களை நான் கூறுகிறேன்.
இராணுவத்தில் இருந்து அரசியலுக்கு வந்து 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட, தற்போது அரசியல்வாதியாக இருக்கும் அவரது அரசியல் கட்சி வீழ்ந்து போகும் என கடந்த வருடம் மார்ச் மாதம் அரச ஊடகம் ஒன்றுக்கு சென்று கூறினேன்.
அதேபோல், 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னதாக, இந்த முன்னாள் இராணுவத் தளபதி நாட்டை விட்டு சென்று விடுவார் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.
2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட இந்த இராணுவ அதிகாரிக்கு தற்போது ராகு திசை நடக்கிறது. இதனால், இவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதிக்கு பிறகு கட்டாயமாக வெளியேறுவார் எனவும் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
இந்திக தொட்டவத்த என்ற இந்த சோதிடர் பிறப்பிலேயே கண் பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno6C.html

Geen opmerkingen:

Een reactie posten