தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

மகிந்தவின் மேடையில் மகிந்தவிற்கு ஆடை களட்டிய EPDP தவராசா

அங்கஜன் அணியின் தாக்குதலில் ஆபத்தான நிலையில் டக்ளசின் தம்பி…

மஹிந்த கூட்டத்தில் டக்ளஸ் – அங்கயன் ஆதவாளர்கள் மோதல்!
மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையினில் ஆளுங் கட்சியினரிடையே துரையப்பா விளையாட்டரங்கில் இன்று முரண்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைக்காக இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார். பிரசாரக்கூட்டம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதி மேடைக்கு வருவதற்கு சற்று முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஈ.பி.டி.பி கட்சியினரே மேற்கொண்டிருந்தனர்.
அவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்த மக்கள் அமர்த்தப்பட்டிருந்தவேளை ஜனாதிபதி வருவதற்குச் சற்று முன்னர் அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்கள் நீலப்படையணி என்று எழுதப்பட்டு மகிந்தவின் படம் பொறிக்கப்பட்ட ‘ரீசேட்டை’ விநியோகிக்க முற்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டது. இதன்போது அங்கஜனின் ஆதரவாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் மீது தாக்கியதாக கூறப்படுகின்றது. யார் மக்களை கூடிய அளவினில் கொண்டுவந்ததென்ற பெயரை தட்டிக்கொள்வதிலேயே இம்மோதல் நடந்துள்ளது.


angjnangjn-01
http://www.jvpnews.com/srilanka/92506.html

டக்ளசால் உழுத்துப்போனது மஹிந்த….

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர்.
அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இவர்களுடன் ரயிலில் பயணம் செய்திருந்தனர்.

எனினும் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தினில் மட்டும் உலங்குவானூர்தியினில் அவர் வருகை தந்து குறிப்பிடத்தக்கது.presiden_visitpresiden_visit-01RAINRAIN-01RAIN-02
http://www.jvpnews.com/srilanka/92513.html

மகிந்தவின் மேடையில் மகிந்தவிற்கு ஆடை களட்டிய EPDP தவராசா

இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சங்கிலியன் பூங்காவை கிட்டு பூங்கா என்று முதலில் தடுமாறினார்.

போரில் ஒரு மக்களும் இறக்கவில்லையென கிட்டு…… சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவத் தளபதி பொன்சேகா துணிகரமாக சொல்லியிருக்கிறார். என சரத் பொன்சேகாவை சாடிக் கொண்டிருந்த தவராசா வாய் தடுமாறி மகிந்தவை பேசியுள்ளார்.

தமிழர்கள் சிங்களவர்களை அண்டித்தான் வாழ வேண்டுமென்று கனடாவிற்குச் சென்று உரையாற்றி இருந்தவர். அப்படியான மகிந்த ராஜபக்சவைத் தான்…. மன்னிக்க வேண்டும்… என தெரிவித்துள்ளார்.presiden_visit-01
http://www.jvpnews.com/srilanka/92536.html

Geen opmerkingen:

Een reactie posten