[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 06:34.56 AM GMT ]
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஸாட் பதியூதீன், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் மட்டக்களப்பு பொலநறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ரிதிதென்ன ஜெயந்தியாய கிராமத்தில் அக்கிராம மக்களால் வரவேற்கப்பட்டதுடன், நாவலடிச் சந்தியில் அப்பகுதியில் உள்ள மீள்குடியேற்ற மக்களால் நாவலடி சந்தி பள்ளிவாயலில் வரவேற்கப்பட்டு மீண்டும் பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் மௌலவி மஜீத் அவர்களால் விஷேட துஆப் பிராத்தனை இடம்பெற்றது.
அதிதிகள் ஊர்வலமாக பொதுக் கூட்டம் இடம்பெற்ற ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு கலந்து கொண்ட அதிதிகளால் உரை இடம்பெற்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep0.html
மட்டு.புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் ஆணொருவரின் சடலம் மீட்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 06:46.21 AM GMT ]
40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடலில் மிதந்து வந்த நிலையிலேயே இச்சடலம் கரையொதுங்கியுள்ளது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep1.html
அவசரமாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டாம்: சுதந்திரக் கட்சியினர்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:07.36 AM GMT ]
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தற்போதுள்ள நாடாளுமன்றம் தேசிய அரசாங்கமாக செயற்பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep2.html
பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம்! ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 07:09.25 AM GMT ]
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால், சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம், முறைகேடுகள் தொடர்பில் நீதியான விசாரணை தேவை, பல்கலையில் முறையற்ற நியமனங்களை நிறுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம், வெளிவாரி பேரவை உறுப்பினர்களே வெளியேறுங்கள், கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை தேவை, நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcep3.html
Geen opmerkingen:
Een reactie posten