[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 03:16.11 AM GMT ]
பிரதம நீதியரசர் ஒருவரை நியமிக்கவும், பிரதம நீதியரசர் ஒருவரை நீக்கவும் எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் மொஹான் பீரிசின் இல்லத்திற்குச் சென்று அவரை பதவி விலகுமாறு ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டது உண்மையா? அவ்வாறு அச்சுறுத்தல் செய்தவர் யார்? அவரது பெயர் என்ன? என்பது பற்றி பிரதமர் இந்த சபைக்கு விளக்கமளிக்க வேண்டும் என விசேட கேள்வியொன்றை எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த உரையின் பின்னர் தினேஷ் குணவர்த்தன எம்.பியும் பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பேசினார்.
பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டது அதி உயர் பாராளுமன்றத்தின் தத்துவங்களையும் அரசமைப்பையும் அப்பட்டமாக உதாசீனப்படுத்தும் செயல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
பிரதம நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவரை விலக்குவதற்கான ஆலோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளோம். அதன்படி சபாநாயகருக்கு ஜனாதிபதிக்கும் அளித்திருந்தார்.
அரசியல் அமைப்பின் படியும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களுக்கு உட்பட்டே பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். அதிகெளரவமான பதவியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்று அவரை அச்சுறுத்தினார் என்றும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரினதும், தினேஷ் குணவர்த்தனவினதும் உரைகளை செவிமடுத்த பிரதமர் கருத்து வெளியிட்டார்.
பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் முழுமையான விளக்க அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இது தொடர்பாக விவாதம் தேவைப்பட்டாலும் அது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நேரம் வழங்கத் தயார் என்றும் பிரதமர் தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft5.html
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் நீண்டகால பொருளாதார நோக்கு இல்லை: சுசில் பிரேமஜயந்த்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 03:27.09 AM GMT ]
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
செலவு தொடர்பாக கூறும் அதேவேளை அரசாங்கத்துக்கு வருவாயைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி இந்த வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைப்பின் காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாங்கம் எரிபொருளின் விலையைக் குறைத்தது. அதன் பிரதி பலனையே மக்களுக்கு வழங்கியிருப்பதாக சுசில் பிரேமஜயந்த சுடு்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft6.html
குடிசையில் தீ! தந்தையும் குழந்தையும் பலி: அம்பாறையில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 05:44.47 AM GMT ]
வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தந்தையும் 3 வயதுடைய மகனும் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்மாயில்புரம் சுனாமி விட்டுத்திட்ட குடியிருப்பிலேயே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் காணி தொடர்பான வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.
குடிசை வீட்டில் உறக்கிக் கொண்டிருந்த 43 வயது தந்தை மற்றும் 3 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 7 வயது மகள் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் வாள்வெட்டு 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 06:18.59 AM GMT ]
இதன் காரணமாக மூவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகுலன் சுஜாதா (25), சதீஸ் உசாந்தினி (22), திருச்செல்வம்(26) ஆகியவர்களே படுகாயம் அடைந்துள்ளனர்.
வாள்வெட்டின் சந்தேக நபரை கைது செய்ய பருத்திதுறை பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 06:31.50 AM GMT ]
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போன உறவுகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காணாமல்போனோர் சங்கமும் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்த போராட்டத்தினை மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் நடாத்தியது.
மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்ட முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா,பிரசன்னா இந்திரகுமார் உட்பட காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த காலத்தில் நடாத்தப்பட்ட காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கையில்லையெனவும் காணாமல்போனவர்கள் தொடர்பில் புதிய ஜனாதிபதி துரித நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் புதிய அரசாங்கத்தினை வலியுறுத்தும் மகஜரை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.
எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்', 'அரசே இதற்கு சரியான நடவடிக்கை எடு' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் சுமார் 14ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfu1.html
10,000 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ஒத்திவைப்பு
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 06:56.42 AM GMT ]
2015.02.01 திகதியன்று அமுல்படுத்தப்படவிருந்த இடமாற்றம், மே மாதம் 1ம் திகதி தொடக்கம் பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது: புத்தளத்தில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 07:14.45 AM GMT ]
புத்தளம் பிரதேசத்தில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பிரதேசத்தை சேர்தவர். இவர் 7 வயதுடைய சிறுமி ஒருவரையே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
கைதான சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.
சிறுமி தனியாக வீட்டிலிருந்தபோது சந்தேக நபரால் நேற்று முன்தினம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfu4.html
வத்தளை பிரதேச சபைத் தலைவர் மீது உறுப்பினர்கள் தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 07:29.09 AM GMT ]
பிரதேச சபையின் இவ்வருடத்துக்கான மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானபோதே பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பிரதேச சபையின் தலைவர் பலவந்தமாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை சிகிச்சைகளுக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடு காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் பணம் அறவிடுதல் தடை: கல்வி அமைச்சு
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 07:45.25 AM GMT ]
பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக சேர்க்கும் போதும், அதன் பின்னரும் பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இந்த முறைமை ஏற்படுத்தப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடை செய்யப்படுள்ளதாகவும் காரிய வம்சம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு மேலாக நிதி சேகரிக்கப்படும் போது, அது தொடர்பில் கல்வி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் சுட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfu6.html
புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி!
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 08:28.49 AM GMT ]
கடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன், வன்னேரிப் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் மகேஸ், விவேகானந்தநகர் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கலந்துகொண்ட அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன் கருத்து தெரிவிக்கையில்,
போர்க்கால எச்சங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வாழ்க்கையில் மாறுதல் தரக்கூடிய ஒரு காரியம்தான் ஆற்றலுடைய கல்வியை முயற்சியோடு கற்றல். எமது மண்ணின் சொத்தான கல்வியை காப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் அர்ப்பணிப்பு செய்யவேண்டியுள்ளது.
நிலத்தில் இடையறாத முயற்சியின் மூலம் கல்வியை தொடரும் எங்கள் வாழ்க்கையும் இதற்காக பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் எங்களுக்காக கருணைகாட்டும் நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் போன்ற அமைப்புக்களின் செயற்பாடும் அர்ப்பணிப்புக்களே.
இதன் பலாபலன்களை நாம் எதிர்காலத்தின் அனுபவிக்கலாம்.அப்போது ஆற்றலுடைய பிறரால் ஏமாற்றப்படாத தந்திரம் மிக்க ஒரு தமிழ் சமுதாயம் இங்கு இருப்பதை காணலாம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfu7.html
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 09:26.18 AM GMT ]
சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.
இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரயான இவர் 50 வருடங்களுக்கு மேல் மக்கள் சேவையோடு அனுபவமுள்ளவராக காணப்படுகின்றார்.
1963 ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்த ஆளுநர், 1967ம் ஆண்டு இலங்கை சிவில் சேவைக்கு தெரிவு செய்யப்பபட்டதுடன் மட்டக்களப்பு மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையாளராகவும் கடமைமாற்றியுள்ளார்.
பொலனறுவை - நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர், கூட்டுறவு ஆணையாளர், பதிவாளர் நாயகம், புனருத்தாபன அமைச்சின் செயலாளர், தபால்மா அதிபர், இரத்தினக்கல் கூட்டுத்தாபன தலைவர், உள்ளுராட்சி மாகாண சபை அலுவல்கள் அமைச்சின் செயலாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் முன்னர் கடமையாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfvy.html
Geen opmerkingen:
Een reactie posten