தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது

பெப்ரவரி மாதத்தில் நான்கு சட்டமூலங்களை நிறைவேற்ற தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:12.03 AM GMT ]
இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நான்கு சட்மூலங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு அமைய இவ்வாறு நான்கு முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் தொடர்பான சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தும் 19ம் திருத்தச் சட்டம், தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்டம் ஆகியன பெப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சட்டமூலங்களை உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchuz.html

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள்! அரசியல் யாப்பு திருத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:17.09 AM GMT ]
இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தோப்பாவெவ விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu0.html
இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:28.08 AM GMT ]
சட்டவிரோதமான மீன்பிடியை மேற்கொண்டமை காரணமாக இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது
இதன் மூலம் இலங்கையில் இருந்து மீன் உற்பத்திகள் ஐரோப்பியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்வளத்துறை அமைச்சர்கள் தொடர்ச்சியாக பிரசல்ஸ்ஸில் மேற்கொண்ட பேச்சுக்களை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
ஐரோப்பியாவை பொறுத்தவரை மீன் இறக்குமதியில் இலங்கை இரண்டாவது இடத்தை வகிக்கிறது
இலங்கைக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் சர்வதேச கடற்பரப்பில் 2012ம் ஆண்டு முதல் சட்டவிரோத மீன்பிடியில் அந்த நாடு ஈடுபட்டு வந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் எவ்வித செய்மதி கண்காணிப்புக் கருவிகளும் இன்றி அரசாங்கம், இந்து சமுத்திர பகுதியில் அதன் மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்து வந்தது என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் லத்தீன் அமெரிக்க நாடான பெலிஸ் நாட்டுக்கு எதிராக இவ்வாறான தடையை 2014ம் ஆண்டு மார்ச்சில் விதித்த போதும் பின்னர் டிசம்பரில் நீக்கிக்கொண்டது
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu1.html

Geen opmerkingen:

Een reactie posten