தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

மகிந்த மகன்மார் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பியது எப்படி?

SLMC ஹசன் அலியுமா இப்படி..??

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிப்பதனை எதிர்க்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகிப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கட்சியைச் சேர்ந்த பலர் அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்களாக இருக்கும் காரணத்தினால் முதலமைச்சர் பதவிக்காக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடக் கூடாது என்ற தர்க்கதத்தில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கிலேயே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் வேறும் உள்நோக்கங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை பலம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், ஆட்சி அமைக்கும் அளவிற்கு பலம் கிடையாது எனவும், வேறும் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால், ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ்ம் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கிழக்கு மாகாண சபை தொடர்பில் ஏற்கனவே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் பாதி காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், இரண்டாம் காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ்ம் ஆட்சி நடாத்த இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகளை வகிப்பதனால் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம் நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95701.html

மகிந்த மகன்மார் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பியது எப்படி?

இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் என்­றதும் மக்கள் மனதில் அது ஊழல் மோச­டிகள் நிறைந்த நிறு­வ­ன­மென்ற நினைப்பே மேலெ­ழு­கின்­றது.
வாக­னங்­க­ளி­லி­ருந்து எரி­பொ­ருட்­களை திரு­டு­வது, வாக­னங்­களை சொந்தத் தேவை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­து­வது, எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களை வழங்­கும்­போது லஞ்சம் வாங்­கு­வது போன்ற செயல்கள் தொடர்­பி­லேயே மக்கள் மத்­தி யில் பேசப்­படும். ஆனால் இதற்கு மேலான பயங்­க­ர­மான மறு­பக்கம் இக் கூட்­டுத்­தா­ப­னத்தில் உள்­ளது. இது மக்­க­ளுக்கு தெரி­யாது. எரி­பொ­ருட்கள், நிலக்­கரி, கேஸ் கொள்­வ­னவு செய்யும் போது பாரிய மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன.
2011 ஆம் ஆண்டில் கூட்­டுத்­தா­ப­னத்தின் நிர்­வாகம் ஐந்து தட­வைகள் எரி­பொ­ருட்­களை எமக்கு வழங்­க­வில்லை. எரி­பொருள் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­னார்கள். செலவை அதி­க­ரித்­தனர். பல­கோடி ரூபாய்­களை கொள்­ளை­ய­டித்­தனர்.
இது­தொ­டர்­பாக பல தட­வைகள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் முறை­யிட்டோம். ஆனால் இதனை தடுக்க எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
எரி­வாயு மூலம் ஒவ்­வொரு தொன்­னுக்கும் 15 டொலர் மேல­தி­க­மாக பெற்றுக் கொள்­ளப்­பட்­டது.
நிலக்­கரி கொள்­வ­ன­வுக்­கான கேள்வி கோரல்கள் ஒரு போதும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.இதனை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான உரிமை கசினோ சூதாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.
இத­னூ­டாக பெற்றுக் கொண்ட பணம் மூலமே ஜனா­தி­பதி மஹிந்­தவின் பிள்­ளைகள் விண்­வெ­ளிக்கு செயற்கை கோள்­களை அனுப்­பி­னார்கள்.இனிமேல் இவ்­வா­றான ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­ம­ளிக்க மாட்டோம். தரா­தரம் பார்க்­காது தண்­டனை வழங்­கப்­படும்.
இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் நஷ்­ட­ம­டையும் நிறு­வ­ன­மல்ல. ஆனால் அதனை பணம் வீணாகும் நிறு வனமாக காண்பித்தனர்.ஆனால் உண்மை அதுவல்ல. ராஜபக் ஷ வின் ஆட்சியின் செலவுக்காக பணத்தை பெற்றுக் கொள்வதற்கே இந்நிறுவனம் சின்னாபின்னமாக்கப்பட்டது என்றார். இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.sampika

http://www.jvpnews.com/srilanka/95704.html

அசாத் சாலிக்கு எதிராக மொஹான் பீரிஸ் முறைப்பாடு

நேற்றைய தினம் அசாத் சாலி தலைமையில் ஒரு குழுவினர் தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வந்து தன்னை உடனடியாக பதவி விலகும்படியும் இல்லாவிடின் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை இது குறித்து முழுமையான விசாரணை இடம்பெறாமல் கருத்துக் கூற முடியாது என பொலிஸ தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95708.html

Geen opmerkingen:

Een reactie posten