தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச



ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை மார்ச் 27ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 11:45.48 PM GMT ]
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிபுணர் குழுவினால் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.
நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
கடந்த அரசாங்கம் இந்த விசாரணைகளை கடுமையாக எதிர்த்ததுடன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகள் அரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 27ம் திகதி மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயித் அல் ஹ_செய்னின் வருடாந்த அறிக்கையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பற்றிய தகவல்களும் வெளியிடப்படவுள்ளது.
2014ம் அண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்தும் இந்த அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKcht6.html

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு செல்லுமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 11:32.39 PM GMT ]
ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளது. 
இலங்கையில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஐ.நா உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.
இந்நிலையில் வரும் மார்ச் மாத அமர்விற்கு முன்னதாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தாங்கள் முயல்வதாகவும் அதற்கு ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நம்பகமான மூன்றாம் தரப்புக்களின் ஆதாரங்களை விசாரணைக் குழு ஏற்கனவே பதிவு செய்து முடித்திருக்கும். எனினும், இலங்கைத் தீவில் உள்ள பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தமது வாக்குமூலங்களைக் கொடுக்கவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே இந்த வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும் ஐ.நா விசாரணைக்குழுவின் இலங்கை;கான பயணம் மேலும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும்
பாதிக்கப்பட்டவர்களின் விசாரணை மட்டும் அன்றி, குற்றவாளிகளும் விசாரிக்கப்படவேண்டியது அவசியம். இந்த விசாரணை, நேரடியாகக் குற்றம் புரிந்தவர்களை நிர்ணயிக்க மட்டும் அல்லாமல், கட்டளைப் பொறுப்பின் சங்கிலித் தொடரில் எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பைக் கொண்டிருந்தார்கள் என்பதை தீர்மானிக்கவுமேயாகும்.
தடயவியல் ஆதாரங்களை பெற சம்பவம் நடந்த இடங்களுக்கு செல்வது இன்றியமையாதது என தெரிவிக்கப்பட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடித்தில் இலங்கை விவகாரம் தொடர்பிலான அறிக்கையினை சபையில் சமர்பிப்பதற்கு முன்னர் ஆணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைப்பீர்கள் என நம்பிக்கை கொள்ளவதாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKcht5.html
எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் தானே! சம்பிக்கவிடம் புலம்பிய மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:37.54 AM GMT ]
மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அண்மையில் அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு கிழமைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
இதன்போது தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார்.
எனினும் கோபமில்லாத தொணியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
எனினும் அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக குறிப்பிட்டார்
இதன்போது சம்பிக்க ரணவக்கவின் புதிய அமைச்சுப்பொறுப்புக்காக மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu2.html

அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:58.20 AM GMT ]
அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை.
திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன்.
எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமெ அரசியலில் ஈடுபட்டோம்.
எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என்னையும் எனது தந்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனது தாய் எந்தவொரு மோசடியிலும் ஈடுபடவில்லைää உண்மையான விபரங்கள் வெளியிடப்படும் என நம்புகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தங்க மோசடி குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகங்களுக்கு நேற்று விளக்கமளித்த போது நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu3.html

Geen opmerkingen:

Een reactie posten