தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 januari 2015

பசிலை பிடிப்பதற்கு சர்வதேச பொலிசாரின் உதவியை நாடும் அமைச்சர் ஜோன்

வீதிக் கடையில் ‘Tea’ குடிக்கும் நாமல்!



இந்நிலையில், இது வரை காலமும் சீருடையின்றி வெளியில் காணப்படாத மஹிந்த ராஜபக்ச குடும்பமும் தற்போது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது. மஹிந்தவின் புதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது ஹம்பாந்தொட்ட தொகுதியின் வலஸ்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகச் சாதாரண ஹோட்டல் ஒன்றில் எதுவித பந்தாவும் இல்லாது தனிமையில் ‘டீ’ குடிக்கும் காட்சியையே இங்கே காண்கிறீர்கள்.Namail
http://www.jvpnews.com/srilanka/95509.html

வெள்ளவத்தை சிறுமி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது….

வத்தளை மாபோல பிரதேசத்திலிருந்து 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடியிருப்பின் 11 வது மாடியில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்து 2வது மாடியில் உள்ள சிறுவர்பூங்காவுக்கு தாயாரும், 3 பிள்ளைகளும் சென்றுள்ளனர்.
பின்னர் குடிநீர் அருந்துவதற்காக மூத்தசகோதரியுடன், உயிரிழந்த குழந்தை மின்தூக்கியில் 11வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்22 ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இந் நிலையில் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னும் மர்மமாகவே உள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளஉயிரிழந்த குழந்தையின் மூத்த சகோதரி: ” தங்கை குடிநீர் குடிக்க வேண்டும் என அழுதார் எனவே நான்அவருக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்கும்
பொருட்டு கூட்டிக்கொண்டு மின் தூக்கியில் மேலே சென்றேன். குறித்தமாடிக்கு சென்றதுடன் நான் மின்தூக்கியிலிருந்து வெளியேறியதுடன் அவரை மின் தூக்கியின் கதவைத் தானாகதிறந்து வைத்திருக்கும் பொத்தானை அழுத்திக் கொண்டு இருக்கும் படி கேட்டுக்கொண்டேன், ஆனால் அவர் பொத்தானிலிருந்து கையை எடுத்து விட்டார்..
இதனையடுத்து மின் தூக்கி மேலே சென்று விட்டது. அவர்அங்கிருந்து கீழே பாய்ந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளகுறித்த தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாப்பு ஊழியரொருவர்:
” நான் பிரதான வாயிலேயே கடமையில்இருந்தேன், எனக்கு அழைப்பொன்று வந்தது குழந்தையொன்று காணாமல்
போயுள்ளது அவரைத் தேடும்படி எமக்கு தெரிவிக்கப்பட்டது. நாம் மேலே இருந்து தேடிக்கொண்டு வரும்பொழுது கீழே இருந்து குழந்தையொன்று விழுந்து கிடப்பதாக சத்தம் கேட்டது.இதனையடுத்து வந்து பார்க்கும்போது குழந்தை விழுந்து கிடந்தது முகத்தில் காயமும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தொடர்மாடி குடியிருப்பில்உரிய பாதுகாப்பு வழிமுறைகள்கடைபிடிக்கப்படாமையே விபத்துக்கான காரணம் எனவும் அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் குழந்தையின் உறவினர்கள் மற்றும்பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இச் சம்பவத்தின் என்ன நடந்தது என்பதனை தெரிந்துகொள்ள சி.சி.டிவி காணொளியை பரிசீலிக்ககோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவற்றில் இச் சம்பவம் பதிவாகியிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது , இதனையடுத்து ஆத்திரமடைந்த குழந்தையின்உறவினர்கள் தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரியிடம் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளமை மரண விசாரணைகளில் இருந்து தெளிவாகின்ற போதிலும் சம்பவம் நிகழ்ந்த விதம் இன்னும் மர்மமாகவே உள்ளது.Fathima 01
http://www.jvpnews.com/srilanka/95513.html

பசிலை பிடிப்பதற்கு சர்வதேச பொலிசாரின் உதவியை நாடும் அமைச்சர் ஜோன்

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிச் சென்றவர்களை மீள அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
இவர்களை மீளவும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அழைத்து வர முடியாவிட்டால் சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படுவர் என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95516.html

Geen opmerkingen:

Een reactie posten