தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!



மஹிந்த ராஜபக்‌ஷ பணம் தரவில்லை! குற்றப் புலனாய்வுத்துறையில் முறையிட்ட ஊடகவியலாளர்!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 09:55.33 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு பணம் தரவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.
சுனில் ஜயசேகர எனும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.
இவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவன ஆங்கில ஊடகவியலாளராகக் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில் கடந்த தேர்தலின்போது மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் சுமார் 150 கோடி ரூபாவை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பதாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஊடகவியலாளர் சுனில் ஜயசேகரவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மஹிந்த தரப்பினர் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து சுனில் ஜயசேகர மறுத்துள்ளார். அத்துடன் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்‌ஷவின் உதவியுடன் அவர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgq6.html


காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 09:59.51 PM GMT ]
காணாமல் போன தமது உறவினர்களைத் தேடித்தருமாறு கோரி ஒரு தரப்பினர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இலங்கையில் தனிநபர்கள் கடத்தப்பட்டு, காணாமல் போன நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற்றிருந்தது.
அரச தரப்பின் முக்கியஸ்தராக இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷவே இந்தக் கடத்தல்களின் பின்னணியில் இருந்ததாக பரவலான தகவல்கள் வெளியாகியிருந்தன. காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவர்களின் உறவினர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது. மேலும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் தேர்தலில் தோல்வியடைந்து, மைத்திரி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் ஒரு கட்டமாக காணாமல் போன தங்களது உறவினர்களை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொதுமக்கள் குழுவொன்று இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்களுக்கான வழிகாட்டுதல்களை முன்னிலை சோசலிஸக் கட்சியின் முக்கியஸ்தர் துமிந்த நாகமுவ வழங்கியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgq7.html

Geen opmerkingen:

Een reactie posten