[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 10:25.25 AM GMT ]
போதை பொருள் வியாபாரி வெலே சுதா கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுடன் பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் தற்பொழுது இடம் பெறும் செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகார அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வங்கி கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெலே சுதா மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்களையும் சோதனையிட ஆணை பெற்றுள்ளதாக அவர் மெலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo4.html
ஷிரந்தி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்: அனுர சேனநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:20.39 PM GMT ]
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ஷ, அரசுக்குச் சொந்தமான 100 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக விற்கும் முயற்சியுடன் தொடர்புபட்டிருந்ததாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும் அந்த விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ய முயற்சித்ததாகவும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மீதும் வாஸ் குணவர்தனவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை இருட்டடிப்புச் செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மறுத்துள்ளார்.
குறித்த தங்க விற்பனை முயற்சியில் ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்புபட்டிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய் என்றும் அனுர சேனாநாயக்க கூறினார்.
தன்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்காலத்தில் நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp2.html
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:18.25 PM GMT ]
இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக முதலமைச்சர் வகுத்துக் கொண்ட திட்டத்தின் படி இன்றைய தினம் தொடக்கமாக நெடுந்தீவுக்கு மேற்படி குழு சென்றிருந்தது.
இதில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கே.சயந்தன், ஆனோல்ட் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் கட்சியினர் ஆதரவாளர்களும் சென்றிருந்தனர்.
இதன்போது மக்கள் நெடுந்தீவு இறங்கு துறையில் மிகப்பெரும் வரவேற்பினை வழங்கியதுடன், பெருமளவு மக்கள் வீதியில் கூடி சகல வீடுகள் மற்றும் கடைகளில், கும்பங்களை வைத்து முதலமைச்சர் தலமையிலான குழுவிற்கு மலர் மாலைகளை அணிந்து வர வேற்பினை வழங்கினர்.
மேலும் வீதி முழுவதும் வெடியோசைகளால் அதிரும் வகையில் வெடிகளும் கொடுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்றைய விஜயத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் குழுவினர், பின்னர் வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நெடுந்தீவு மக்கள் குடிதண்ணீர், வீதி, படகுப் போக்குவரத்து, மற்றும் உள்ளக போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் ஈ.பி.டி.பியின் அக்கிரமங்களிலிருந்து விடுதலை வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
குறித்த விஜயம் இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgq1.html
Geen opmerkingen:
Een reactie posten