தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்

பொலிஸ் இடமாறுதல்கள் ரத்து! மைத்திரி அரசாங்கம் தீர்மானம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 12:57.39 AM GMT ]
முன்னைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நடைபெற்ற பொலிஸ் இடமாற்றங்களை ரத்துச் செய்ய மைத்திரி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் அவருக்குத் தேவையான முறையில் பொலிஸ் உயரதிகாரிகள் தொடக்கம் சாதாரண உத்தியோகத்தர்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் அண்மித்த நிலையிலும் குறித்த இடமாற்றங்கள் நடைபெற்றிருந்தது. எனினும் குறித்த இடமாற்றங்களின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னைய அரசின் விருப்பு, வெறுப்புகளின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பொலிசாரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முறைகேடாக இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் தமது முன்னைய பணியிடங்களுக்கு மீள அழைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgry.html
குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரவன்சவின் மனைவி கைது செய்யப்படுவார்!
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:09.51 AM GMT ]
குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் என்று பொலிஸ் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் தருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சசி வீரவன்ச ரணசிங்க ரண்தினு முதியான்சலாகே சிர்ஜா உதயங்கனி என்ற பெயரில் ஒரு கடவுச்சீட்டை பெற்றுள்ளார். அதில் பிறந்த திகதி பெப்ரவரி 1 - 1967 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர் அவர் பெற்றுள்ள கடவுச்சீட்டில் பிறந்த திகதி பெப்ரவரி 3 -1971 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் ஒருவர் இராஜதந்திர கடவுச்சீட்டை பெறும் போது சாதாரண கடவுச்சீட்டின் இலக்கங்களை குறிப்பிடவேண்டும். எனினும் அதனை சசி செய்யவில்லை.

அத்துடன் அமைச்சர் ஒருவரின் மனைவி இராஜதந்திர கடவுச்சீட்டை பெறமுடியுமா? என்பதும் கேள்விக்குரிய விடயம் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் வேடமிட்ட பிக்கு! நண்பரின் காதலுக்கு உதவ முற்பட்ட நிலையில் கைது!
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:19.58 AM GMT ]
பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் வேடமிட்டு, தனது நண்பர் ஒருவரின் காதலுக்கு உதவ முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் வரக்காப்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பிக்குவின் நண்பர் ஒருவர் வரக்காப்பொல பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவரை காதலித்துள்ளார். எனினும் இவர்களின் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

நண்பரின் காதலுக்கு எதிராக உள்ள இரு தரப்பு பெற்றோர்களையும் சமாதானப்படுத்தி, காதலர்களை சேர்த்து வைக்கும் நோக்கில் குறித்த பிக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் வேடமிட்டு தனது நண்பருடன் அவரது காதலி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

எனினும் காதலி வீட்டார் இது குறித்து வரக்காப்பொல பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்த, விரைந்து வந்த பொலிசார் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த பிக்கு மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தற்போது அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹூகோ இலங்கை வருகிறார்!
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:26.50 AM GMT ]
பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதிவரை தங்கியிருக்கும் அவர், யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
ஹூஹோ  இலங்கைக்கு விஜயம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கொழும்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்காக பிரித்தானியா தொடர்ந்தும் உதவும் என்று ஹூகோ இலங்கை விஜயத்துக்கு முன்னர் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் ஆங்கில மொழி பயிற்சிகள் தொடர்பிலான முன்னேற்றங்களை அவதானிக்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr3.html
அடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:27.35 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம், 15ம் திகதிகளில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்தய விஜயத்தின் போது, ஜனாதிபதி திருப்பதி கோயில் மற்றும் புத்தகாயவிற்கும் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நான் இலங்கையை விட்டு தப்பியோடவில்லை! முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் மறுப்பு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:34.21 AM GMT ]
நான் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ளவில்லை.
தேர்தலின் பின்னர் நான் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக சில ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. எனினும், இந்த ஊடகச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.
குருணாகலில் வசித்து வருகின்றேன். வாரந்தோறும் கொழும்பிற்கு வந்து செல்கின்றேன்.
ராஜதந்திர கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளேன். தற்போது ஓய்வு பெற்ற சாதாரண அதிகாரியொருவராக வாழ்ந்து வருகின்றேன் என ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr5.html

தமிழின அழிப்பு ஆவணநூல் லண்டனில் அறிமுகமாகின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:36.35 AM GMT ]
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை ஓர் பெரும் ஆவணமாக பதிவாக்கியுள்ள SRI LANKA: HIDING THE ELEPHANT எனும் நூல் லண்டனில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள், ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்நூலினை படைத்துள்ளதோடு, லண்டன் அறிமுக நிகழ்வில் நேரடியாக பங்கெடுக்க இருக்கின்றார்.
 சென்னையிலும் ஜெனீவாவிலும் கனடாவிலும் என பல்வேறு முக்கிய தலைநகரங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் லண்டன் அறிமுக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அழைத்துள்ளார்.
இந்நிகழ்வு எதிர்வரும் 31-01-2015 அன்று Harrow Civic Centre, 2nd Floor, Sation Road, HA12XY எனும் முகவரியில் மாலை 6:30 முதல் இரவு 9:30 மணி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgr6.html
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 01:55.34 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தயார். எனினும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து யோசனை வெளியிடப்பட்டதன் பின்னர் அதனை ஆராய வேண்டும்.
யோசனைத் திட்டத்தை தெளிவாக ஆராய்ந்த பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் ஆதரிக்க முடியாது.
அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது.
எனினும் அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் மாற்றம் செய்வது நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நெருக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.
இன்னுமொரு தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் சுதந்திரக் கட்சி மிகவும் பொறுமையுடன் நிலைமகளை அவதானித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் இடமில்லை! நிமல் சிறிபால
எதிர்வரும் தேர்தல்களின் போது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 
நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக நேற்று கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகா விகாரைகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் தலதா மாளிகையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நிமல் சிறிபால டி சில்வா,
எதிர்வரும் தேர்தல்களின்போது குற்றப்பின்னணி உடையவர்களுக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் சுதந்திரக் கட்சி மூலம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரு சில அரசியல்வாதிகள் மீது தனிப்பட்ட முறையில் சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய நிமல் சிறிபால டி சில்வா, அது தொடர்பில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எதிர்வரும் தேர்தல்களில் சஜின் வாஸ், ரோஹித்த அபேகுணவர்த்தன, லக்ஷ்மண் வசந்த பெரேரா, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நிசாந்த முதுஹெட்டிகம, சரண குணவர்த்தன, மேர்வின் சில்வா போன்றோருக்கு வேட்புமனு வழங்குவதில்லை என்று உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgsy.html

Geen opmerkingen:

Een reactie posten