தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !

லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- எரிந்த மனைவி !

[ Jan 30, 2015 06:34:27 AM | வாசித்தோர் : 24395 ]
லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன் கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார். இதன் போது மனைவி கணவனை எட்டி கட்டிப்பிடித்துள்ளார். இதனால் வவுனியா உக்கிளாங்குளத்தைச் சோந்த கஜேந்திரன் சுதாஜினி (வயது 28) என்ற பெண் மரமடைந்துள்ளதுடன் அவரது கணவனான பாலசந்திரன் கஜேந்திரன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மரணமடைந்த குறித்த பெண்ணின் கணவர் ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதுடன் திருமணம் செய்து 5 வருடங்கள் ஆகியும் மனைவியை வெளிநாடு கூப்பிடாது தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்தவர் என்றும் தெரியவருகின்றது. இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/2133.html


நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !

[ Jan 30, 2015 05:50:55 AM | வாசித்தோர் : 17270 ]
நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட நடமாடும் விடுதி ,அதாவது ஹோட்டல் கண்டுபிடிக்கப்படுள்ளது அந்த நடமாடும் விடுதி வாகனத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் இருக்கைகள் கொண்டவையாகவும் இருந்தது. பொதுநலவாய அமைப்பின் மாநாட்டுக்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்றை தனதாக்கி கொண்ட மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஷ தனது சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார்.
அந்த வாகனத்தையே தற்பொழுது பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வாகனத்தை பயன்படுத்தி பல குற்றசெயல்கள் மற்றும் பெண்களை பலவந்தமாக தனது விருப்பத்துக்கு பயன்படுத்தி வந்தார் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2131.html



Geen opmerkingen:

Een reactie posten