தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!

ரணிலை தோற்கடிக்க மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும்: உதய கம்மன்பில
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:42.59 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க வேண்டுமாயின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நாட்டைப் போன்றே கூட்டமைப்பிற்கும் மிக முக்கியமானது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவினால், இன்னும் 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க நேரிடும்.
அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
நாட்டில் பிரிவினைவாதம் உருவாகி தனிநாடு ஒன்று உருவாவதனை தடுக்க முடியாது.
பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்ட வேண்டுமாயின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும். வேறு யார் போட்டியிட்டாலும் ரணில் வெற்றியீட்டுவார்.
மஹிந்தவை வெற்றியீட்டச் செய்ய புதிய கூட்டணி ஒன்றை அமைக்கவும் நாம் தயார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx4.html
நாடாளுமன்றில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ச
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:50.42 AM GMT ]
நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருப்பதனால் அராசங்கத்தை தோற்கடிக்கக் கூடுமென்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
எனினும் நாடாளுமன்றில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உண்மையில் நாடாளுமன்றில் ஆளும் கட்சியை, எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடிக்க முடியும். அவ்வாறு தோற்கடித்தால் ஐந்து நிமிடங்களில் ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் நடாத்த அறிவிப்பு விடுப்பார். எனினும் அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் முன்வர மாட்டார்கள்.
முடிந்தால் இந்த அரசாங்கத்தை நாடாளுமன்றில் தோற்கடித்து காட்டுங்கள் என நான் சவால் விடுக்கின்றேன்.
ஏனெனில் அரசாங்கத்தை தோற்கடிக்க நாடாளுமன்றில் வாக்களிக்கும் எந்தவொரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அடுத்த தேர்தலில் போட்டியிட அந்தந்த கட்சிகளில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx5.html
புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் திகதி அறிவிப்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 02:16.18 AM GMT ]
வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
மீள்குடியேற்றங்களை காரணம் காட்டி இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதியன்று இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது

பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:06.27 AM GMT ] [ விகடன் ]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ''இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்'' என்ற போஸ்டர்கள் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
அந்த போஸ்டரில், நேதாஜி, பிரபாகரன் ஆகியோருடைய படங்களுடன் நரேந்திர மோடி, கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்று இருப்பதால், அது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

'தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணி  தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட அந்தச் சுவரொட்டிகளில், 'இந்திய தேசிய தலைவர் நேதாஜியின் 118-வது பிறந்தநாளிலும் அவர் குறித்து நீடிக்கும் மர்மங்களை நரேந்திர மோடி அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட வேண்டும்'' என்ற வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசு பேசுகையில், 

 ''2005-ல் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்‌ஷே வெற்றி பெற்றவுடன் விடுதலைப்புலிகளை அழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தார். ஆனால், அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டது. கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீது இருந்த வெறுப்பு உணர்வையும் அப்போது தி.மு.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் பலவீனங்களையும் புரிந்துகொண்ட காரணத்தினாலேயே ராஜபக்‌ஷேவால் உள்நாட்டுப் போரை தொடங்க முடிந்தது.

2008 மார்ச் 10-ம் தேதி வேலூர் சிறையில் இருந்த நளினியை ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும். அந்த விவரங்களை கருணாநிதி வெளியிட வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த சமயத்தில் அப்போதைய மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். அதன் பிறகு எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் இலங்கை சென்று வந்தனர். அந்த சமயத்தில், 'இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்� என அறிக்கை வெளியிட்ட கருணாநிதி,திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் படுத்துக்கொண்டதன் பின்னணி என்ன?

முத்துக்குமார் தீக்குளிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க முயற்சி செய்ததில் தி.மு.க அரசுக்குப் பெரும் பங்கு இருந்தது. 2009 ஏப்ரல் 10-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பேரணியில் பேசிய கருணாநிதி, 'பிரபாகரன் பிடிபட்டால் பஞ்சாப் சீலம் ஆற்றங்கரையில் போரோஸ் மன்னன் அலெக்ஸாண்டரிடம் பிடிபட்டபோது எப்படி நடத்தப்பட்டானோ அதுபோல் நடத்த வேண்டும்� என்றும், 'நாங்கள் இந்தியாவில் அடிமைகளாக இருக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாது என்றும் பேசியதன் அர்த்தம் என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய ராஜபக்‌ஷே, 'பிரபாகரன் சாகவில்லை. விடுதலைப்​புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்கிற ரீதியில் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே, பிரபாகரன் பற்றிய உண்மைகள் தமிழின மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

ஈழத்தில் கடைசிக்கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் கருணாநிதிக்குத் தெரியும். பிரபாகரன் பற்றிய உண்மைகள் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். இலங்கையில் நடந்த அனைத்து விவரங்களையும் தமிழின மக்களின் நலன் கருதி கருணாநிதி வெளியிட வேண்டும். குறிப்பாக, பிரபாகரன் பற்றிய உண்மைகளை அவர் வெளியே சொல்ல வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.
 
தமிழீழ விடுதலை ஆதரவாளர் முன்னணியின் நெல்லை மாவட்ட பொறுப்​பாளரான கண்மணி மாவீரன், ''நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிடாமல் காங்கிரஸ் அரசு மறைத்து வந்தது. இப்போது பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதுவரை மறைக்கப்பட்டு வந்த அந்த வரலாற்று உண்மைகளை மோடி அம்பலப்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவரும் அதை வெளியிட மறுக்கிறார். 

நேதாஜியை பொறுத்தவரை, 'அடுத்த பிறவி எனக்கு இருக்குமானால், தமிழனாகப் பிறந்து தமிழின மக்களுக்கு தொண்டு செய்வேன் என்று சொன்னவர். நேதாஜி, பிரபாகரன் ஆகிய இருவரைப் பற்றிய முழு விவரங்களும் உடனடியாக     வெளி​யிடப்பட வேண்டும். இதை வலியுறுத்தி ஏற்கெனவே ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். எங்களின் இந்தக் கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடுவோம்'' என்றார் ஆக்ரோஷமாக.

என்ன சொல்லப்போகிறார்கள் மோடியும் கருணாநிதியும்!
 
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceoy.html

Geen opmerkingen:

Een reactie posten