இவர்கள் நாடு திரும்பவேண்டும் என்று சமீபத்தில் இந்தியா சென்ற இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவர்கள் நாடு திரும்பினால் எங்கே சென்று வாழ்வது ? என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் காணிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை இவர்கள் நாடு திரும்பினால், ஐ.நா மற்றும் உலக வங்கி இவர்களை பராமரிக்கவென பல மில்லியன் டாலர்களை இலங்கை ஆரசுக்கு கொடுக்கும். எனவே பணச் சிக்கலில் உள்ள இலங்கை அரசுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்பது ஒரு விடையம். இதேவேளை இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூற காரணம் என்ன ? இதுவும் சம்பந்தர் ஐயாவின் ஒரு நரிப் புத்திதான்.
அங்கேயும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அவர்கள் நாடு திரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்கு விழும் வீதமும் (1 லட்சத்தால்) அதிகரிக்கும் அல்லவா ? இதேவேளை இலங்கைக்கு அகதிகள் நாடு திரும்புவது என்பது , அன் நாட்டில் இனப்பிரச்சனை இல்லை என்ற ஒரு விம்பத்தையே பிரதிபலிக்கும். இதனை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள தவறமாட்டார்கள். இலங்கையில் போர்குற்றம் புரிந்தவர்கள், படுகொலைகள் செய்தவர்கள் முதலில் தண்டனை பெறவேண்டும். அங்கே ஈழத் தமிழர்கள் நிம்மதியாக , பயம் இன்றி வாழ ஏதுவான சூழ் நிலை தோன்றவேண்டும். அதனை எல்லாம் விடுத்து , ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் கூட முழுசாக முடியுமுன்னர், இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்று கூறுவது சற்றும் பொருத்தமற்றது.
மேலும் நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியுள்ள தந்தை செல்வாவின் மகன் சா.செ.சந்திரகாசன், சமீபத்தில் தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளைச் சந்தித்து ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அது என்னவென்றால் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்பது தான். மேலும் தமிழ் நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிவிட்டால், தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக நடைபெறும் போராட்டங்களையும் , உணர்வலைகளையும் மழுங்கடிக்கச் செய்யவே இந்திய மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை தீட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தற்போது கூட சர்வதேசம் தமிழர்களுக்கு எதிராக ஒரு மாய வலையை பின்னிக்கொண்டு இருக்கலாம் என்று, ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எனவே இது குறித்து மீண்டும் ஒரு முறை நாம் கவனமாக இருப்பது நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten