தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

அரசாங்க சேவை நேரம் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 12 பேர் தெரிவு
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 10:08.55 AM GMT ]
அகில இலங்கை சேவையான ஆசிரியர் கல்வியியலாளர் சேவை பதவிக்கு இம்முறை நாடு முழுவதிலும் இருந்து 206 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்ததுடன் அதற்குரிய நேர்முகப் பரீட்சை மற்றும் கற்பித்தல் செய்முறைப் பரீட்சைகளில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இருந்து இம்முறை 12பேர் தெரிவு செய்யப்பட்டு பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கான கல்வியூட்டல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்த நிபுணத்துவ சேவைக்கு இவ்வாறு இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சிநெறி  21நாட்கள் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் பெனிதெனிய தேசிய கல்வியியல் கல்லூரிகளில் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து 2015. 01.21 அன்றுபுதியகல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்  அவர்களால் இடநிலைப்படுத்தலுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார். 
தற்போது அவர்கள் நாடு முழுவதிலும் உள்ள 18 தேசியகல்வியியல் கல்லூரிகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்களில் ஆசிரிய கல்வியியலாளர்களாக ( விரிவுரையாளர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பதவிக்கு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பின்வரும் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. திரு.கந்தசாமிநிதிஹரன் - வாழைச்சேனை
2. திரு.கந்தக்குட்டிகோமளேஸ்வரன் - செங்கலடி
3. திரு.வேலாயுதப் பிள்ளைபகீரதன் - தேற்றாத்தீவு
4. திரு.தவராசாசரவணன் - களுவாஞ்சிக்குடி
5. திரு.தான்தோன்றிமுருகமூர்த்தி–மட்டக்களப்பு
6. திரு.முத்துவேல் சச்சிதானந்தம் - மட்டக்களப்பு
7. திருமதி.சிவயோகாம்பிகைகணேசலிங்கம் - மட்டக்களப்பு
8. திரு.சதாசிவம் ஜெயராஜா- மட்டக்களப்பு
9. திரு.குணசேகரம் - மட்டக்களப்பு
10. திரு.அ.சிவச்செல்வன் - ஆரையம்பதி
11. டாக்டர்.எம்.பீ.ரவிச்சந்திரா–மட்டக்களப்பு
12. திரு.எம்.எல்.அப்துல் வாஜிட் - ஏறாவூர்
அட்டாளைச் சேனைக் கல்வியியல் கல்லூரிக்கு திரு.கந்தசாமி நிதிஹரன் மற்றும் திரு.சதாசிவம் ஜெயராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திரு.க.கோமளேஸ்வரன், டாக்டர்.எம்.பீ.ரவிச்சந்திராமற்றும் அப்துல் வாஜிட் ஆகியோர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கும் திரு.வே.பகீரதன் மற்றும் திரு.குணசேகரம் ஆகியோர் பத்தனை சிறிபாத கல்வியியல் கல்லூரிக்கும் திரு.மு.சச்சிதானந்தம், திருமதி சிவயோகாம்பிகை கணேசலிங்கம் ஆகியோர் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கும், திரு.தா.முருகமூர்த்தி அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கும்,திரு.த.சரவணன் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரிக்கும் திரு.அ.சிவச்செல்வன் தர்க்காநகர் தேசியகல்வியியல் கல்லூரிக்கும் ஆசிரியகல்வியியலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo3.html
கோத்தபாய இதற்காகவா 39000 மில்லியன் பெற சூழ்ச்சி செய்தார்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 10:51.21 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை கடற்படைக்கு கிடைத்த யூ.எஸ் டொலர் 300 மில்லியனை (இலங்கை நாணயப்படி 39000 மில்லியன்) தனியார் அவன்கிரேட் பாதுகாப்பு சேவை(Avant Grade Security Services Limited PVT LTD)(தனியார் நிறுவனம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு மாற்றினார் என தெரியவருகிறது.
இது பற்றி தெரியவருவதாவது, இலங்கை கடற்படை மாத்திரம் வெளிநாட்டு கப்பல்களுக்கு தென்பகுதியில் பாதுகாப்பு கொடுத்து இந்த பெரும் தொகை பணத்தை வருமானமாக பெற்றுவந்தது.
எனினும் எட்மிரல் சோமதிலக்க தியாநாயக்கா கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தனியார் பாதுகாப்பு கம்பனி ஆரம்பிக்கப்பட்டு இந்த வருமானம் தனியார் கம்பனிக்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை இவர்களுக்க கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தனியார் கம்பனியின் மூலம், ஆதாயம் கோத்தபாயவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது பாதுகாப்பு போக்குவரத்து போன்றவை பொறுப்பேற்கப்பட்டு கடற்படைக்கு கிடைத்த வருமானத்தை இந்த தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பெரும் தொகையும் கடற்படைக்கு ஒரு சிறு தொகையுமே வழங்கப்பட்டு வந்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo5.html

ஒபாமா இலங்கை தொடர்பாக இந்தியாவில் கருத்து
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 11:03.01 AM GMT ]
இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா புதுடெல்லியில் உரையாற்றிய போது தனது உரையில் இலங்கை தொடர்பிலும் விசேட குறிப்பொன்றை அவர் மேற்கொண்டார்.
இந்த பிராந்தியத்தில் இலங்கை மற்றும் பர்மா போன்ற நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க முடியுமெனவும், அந்நாடுகளில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று அவரது விஜயத்தின் இறுதி நாள் என்பது குறிப்பிடதத்தக்கது.

பிரதம நீதியரசர் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி.
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 11:21.07 AM GMT ]
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட 100 நாள் வேலைத் திட்டம் தேசிய நிறைவேற்றுப் பேரவையினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்தல்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துதல்.
விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் விசேட குழுவொன்றை நிறுவுதல்.
மற்றும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo7.html

உழவு இயந்திரத்தில் மோதுண்ட குடும்பஸ்தர் தலை நசுங்கி பலி
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 11:37.03 AM GMT ]
புலோலி தெற்கு முகாவில் வீதியில், வல்லிபுரக் கோயிலுக்கு அருகே இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் துன்னாலை வடக்கு, போதகர் மடத்தடியைச் சேர்ந்த சரவணமுத்து சந்திரமோகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிக்கொண்டு வந்த உழவு இயந்திரம், சைக்கிளில் பயணித்த அவர் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பருத்தித்துறை நீதிவான் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளின்பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, விபத்துக்குக் காரணமான நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgpy.html
அரசாங்க சேவை நேரம் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 11:52.18 AM GMT ]
அரசாங்க வைத்தியர்கள் அரசாங்க சேவையில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய நிலையங்களில் சேவை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten