அடாவடி இராணுவத் தளபதிகள் திருப்பி அழைக்கப்படுவார்….
2013ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் நாள் ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியல் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் 26 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்களை கைது செய்யக் கோரியும், நேற்று ரதுபஸ்வெல மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற சிறிலங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ‘பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியருக்கு, முன்னைய அரசாங்கம் வெளிநாட்டில் இராஜதந்திரப் பதவியைக் கொடுத்து அனுப்பியிருந்தது என்பதை அறிவேன்.அவர் திருப்ப அழைக்கப்படுவார்’என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க உறுதியளித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95482.html
கோத்தாவை விசாரிக்க “CID” முஸ்தீபு
ஊடகங்கள் மூலமாக தாம் அவ்வேளையில் அங்கு சென்றிருந்தமை குறித்து வேறு விளக்கங்களை கோத்தபாய முன் வைத்திருக்கின்ற போதிலும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வேறு விதமான சந்தேகங்களையும் எழுப்பியுள்ள நிலையில் குறித்த தினத்தில் கோத்தபாய அலரி மாளிகையில் காணப்பட்டது தொடர்பாக தீர விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95491.html
50 கோடி தங்கத் திருட்டில் மஹிந்தவின் மனைவியா….
மேர்வின் சில்வாவின் மகன் கைதும் அதற்கு அவர் அப்போது அளித்த விளக்கமும் இப்போது தெரிவிக்கும் கருத்துக்களும் எடுத்துக்காட்டாகும்.
இந்நிலையில் மேலும் ஒரு பொலிஸ் உயரதிகாரியான வாஸ் குணவர்தன பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் கைதாகி நீண்ட நாள் சிறைவாசமும், வழக்குச் சிக்கலுமாக அவரது நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது இது தொடர்பில் அவரது மனைவி திருமதி சியாமலி குணவர்தன புதிய கோணத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளார்.
திருமதி வாஸ், அவரது விளக்கத்தின் அடிப்படையில், அரச திறைசேரிக்குச் சொந்தமான சுமார் 50 கோடி ருபா பெறுமதியான தங்க நகை மோசடியொன்று தொடர்பாக அப்போது டி.ஐ.ஜியாகப் பணியாற்றிய வாஸ் குணவர்தன, குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய விசாரணை செய்ய ஆரம்பித்ததாகவும் அவ்விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச அதில் தொடர்பு பட்டிருந்தாகவும் இந்த விசாரணையின் போது வாஸ் குணவர்தன பல உயரதிகாரிகளால் அணுகப்பட்டு ஜனாதிபதியின் மனைவிக்கு இதில் தொடர்பில்லையென அறிவிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.
இதில் பிரதானமானவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்க என தகவல் வெளியிட்டுள்ள திருமதி வாஸ், அநுர சேனாநாயக்க தனது கணவரிடம் இவ்வாறு ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிடும்படி வற்புறுத்தியதாகவும் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன இயக்குனர் ஹட்சன் சமரசிங்கவும் இது தொடர்பாக தொடர் அழுத்தம் தந்ததாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இத்தகவலை வெளியிட்டால் ஒரு போதும் வாஸ் வெளியே வர முடியாது என தாம் கடந்த அரசால் பயமுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தற்போது சூழ்நிலை மாறியிருக்கும் நிலையில் இது குறித்து தனது கணவர் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையிடும்படி கூறியதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல தகவல்களை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் திருமதி வாஸ் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை மொஹமட் சியாம் எனும் ஒரு வர்த்தகரின் கொலைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95494.html
இராணுவ சீருடையில் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்
பல இடங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் கருப்பு நிற டிபன்டர் ரக வாகனங்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சியினர் அவ்வேளையில் தொடர்ச்சியாக முறையிட்டு வந்த நிலையில், கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஆசியில் இயங்கிய குறித்த நிறுவனத்திடமும் கனரக ஆயுதங்களும் ஏறத்தாழ ஒரு தனி இராணுவம் போன்ற கட்டமைப்புடனும் செயற்பட்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/95497.html
என்னால் யாருக்கும் ஆபத்து இல்லை; ஹிருனிகா
ஏற்கனவே ஹரின் பெர்னான்டோ, உதய கம்மன்பில, தயாசிரி ஜயசேகர போன்றோர் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தானும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவே அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95500.html
நாகர்கோவில் பகுதியில் ஈ.பி.டி.பி அடாவடி!
இதுகுறித்து மேலும் தெரியதாவது :
வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் பகுதியில் நீண்டகாலமாகவே ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி கட்சி அதிக செல்வாக்குடன் இருந்ததால் பொதுமக்களால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மணல் அகழ்வினால் நாகர்கோவிலை அண்டிய கடல் பகுதியின் நீர் நேரடியாகவே கிராமத்துக்குள் நுழையும் நிலையை எட்டியுள்ளது. சிறு அளவில் கடல் அலை மேலெழுந்தாலே கிராமமே கடலுக்குள் அள்ளுண்டுபோகும் சூழல் உருவாகிவிட்டது.
எனவே இந்த ஆபத்து குறித்து எச்சரித்த பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மகேஸ்வரி நிதியத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட பொலிஸார் தலையிட்டு மணல் அகழ்வதில் தற்காலிக தடையை விதித்தனர்.
இன்று காலை நாகர்கோவில் பகுதிக்கு சென்ற மகேஸ்வரி நிதியத்தின் உழவூர்திகள் வழமைபோன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டன. எதிர்ப்புக் கோசங்களை எழுப்பியவாறு மணல் அகழும் இடத்திற்கு வந்த குறித்த பிரதேச மக்களை ஈ.பி.டி.பியினர் விரட்டி விரட்டித் தாக்கினர். இதன்போது ஜீவராஜா (வயது-29 ) என்பவர் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தார். மேலும், நாகர்கோவில் பகுதியின் சமூக செயற்பாடுகளில் அக்கறையுடன் செயற்படும் இளைஞர்களுக்கு ஈ.பி.டி.பியினர் எச்சரிக்கையும் விடுத்துச் சென்றுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/95503.html
Geen opmerkingen:
Een reactie posten