தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கம்

குமார் குணரட்னம் கைது செய்யப்படுவாரா?
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 02:12.25 PM GMT ]
முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தை மீண்டும் நாளைய தினம் குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜாகொட குறிப்பிட்டார்.
குமார் குணரட்னம் வேறு பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பினார்.
தனது விருப்பத்தின் போரில் நாட்டுக்கு வந்த கட்சி தலைவர் ஒருலரை கைது செய்ய முயற்சிக்கப்படுவதற்கு எதிராக ஒன்றிணையுமாறு புபுது ஜாகொட ஏனைய அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfs2.html
புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 02:54.37 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை இலங்கை வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் ஜயந்த தனபால சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனவரி 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்த ஜயந்த தனபால, மனித உரிமை கவுன்ஸில் குழு உறுப்பினர்களுடனும் சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜயந்த தனபாலவின் இந்த விஜயம் ஒரு ஆய்வு பயணமாக அமைந்தது என்றும் புதிய ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கும் விஜயமாக இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைய ஐநா மற்றும் மனித உரிமை கவுன்ஸிலுடன் இணைந்து செயற்படத் தயார் என ஜயந்த தனபால ஐநா மனித உரிமையாளர் நாயகத்திடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இணைந்து செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfs3.html

Geen opmerkingen:

Een reactie posten