தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடையும் வரை நாடு ஒரு வகையில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குள் இருப்பது போன்ற தோற்றப்பாடும், பாதுகாப்பு கெடுபிடிகளும், ஒருவகை பீதியும் நிலவி வந்த நிலை மாறி தற்போது மிகச்சாதாரண இயல்பு வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்படும் எனும் நம்பிக்கையும் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இது வரை காலமும் சீருடையின்றி வெளியில் காணப்படாத மஹிந்த ராஜபக்ச குடும்பமும் தற்போது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது. மஹிந்தவின் புதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது ஹம்பாந்தொட்ட தொகுதியின் வலஸ்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகச் சாதாரண ஹோட்டல் ஒன்றில் எதுவித பந்தாவும் இல்லாது தனிமையில் ‘டீ’ குடிக்கும் காட்சியையே இங்கே காண்கிறீர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten