தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம்



தினமும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 10:18.17 AM GMT ]
தினமும் காலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது உதவியாளர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அப்பொழுது அங்கு இடம்பெறும் சம்பவங்கள் நிகழ்வுகளிலும் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv0.html

சிரமங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு இது சிறிய நிவாரணம்: மக்கள் விடுதலை முன்னணி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 12:01.12 PM GMT ]
வரிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரதிபலிப்பாகும்.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருந்தால் இவ்வாறான ஒரு இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க மாட்டாது.
சிரமங்களை எதிர்நோக்கி வந்த மக்களுக்கு சிறிய நிவாரணம் கிடைத்துள்ளது. இவற்றை விட மக்கள் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர்.
எனினும் கிடைத்துள்ள நிவாரணத்தை பார்த்து எம் போல் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு நிதி அமைச்சர் கூறியுள்ளார். வரவு செலவுத்திட்டத்தில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் இது குறித்து சட்டத்தை பயன்படுத்த முடியும்.
2005ம் ஆண்டு எமது தலையீட்டில் தனியார் ஊழியர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.
2005/36 மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் இந்த சம்பள உயர்வு கிட்டியது. இதன்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை சட்ட ரீதியாக மேற்கொள்ள இரு வழிகள் உள்ளன.
அதுதான் 2005/36 சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவது அல்லது இது குறித்து புதிய சட்டத்தை அமைச்சரவையில் நிறைவேற்றுவது, எனக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv3.html


மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 12:21.38 PM GMT ]
வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில்  ஈபிடிபியினர் தொடர்ச்சியாக மகேஸ்வரி நிதியமூடாக மண் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தைப் பெற்று வந்தனர்.
ஆனால் அண்மையில் ஈபிடிபியின் மணல் கொள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் கூட்டமைப்புக்கு எதிராகவும் மீளவும் மண்ணினை கொள்ளையடிக்க கோரியும் இன்று காலை ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினர் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv4.html


Geen opmerkingen:

Een reactie posten