தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

யாழில் சிங்கள ராணுவத்தின் அடாவடி மீண்டும் ஆரம்பம்: நம்பிக்கை தகர்கிறதா ?

யாழ் வடமாராட்சியில் உள்ள இளையகுழம் ராணுவ முகாமில் உள்ள சிப்பாய்கள், செல்வரட்ணம் ஜெகன் என்னும் 29 வயது இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்கள். குறித்த இடத்தில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் சமீபத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதனை உதைபந்தாட்ட மைதானமாக மாற்றி இருந்தார்கள். இதேவேளை இளையகுழம் பகுதில் இருக்கும் ராணுவத்தினரும் வந்து ,அந்த மைதானத்தின் ஒரு பகுதியை தமது இடம் என்று கூறி அதனைப் பிரித்துவிட்டார்கள். இருப்பினும் பரவாயில்லை என்று தமிழ் இளைஞர்கள் விட்டுவிட்டார்கள்.
இன் நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை தமிழ் இளைஞர்கள் அங்கே உதைபந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்கள். ஒரு சமயம் தற்செயலாக அவர்களது பந்து ராணுவத்தினர் விளையாடிக்கொண்டு இருந்த மைதானத்தினுள் சென்றுவிட்டது. அதனை எடுக்கச் என்ற ஜெகனோடு அவர்கள் தகறாறில் ஈடுபட்டுள்ளார்கள். இறுதியாக அவரது மோட்டார் சைக்கிளை ராணுவ முகாமுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதனை அறிந்த ஜெகன் தனது நண்பர்களுடன் ராணுவ முகாமிற்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார். அவரை உள்ளே வருமாறு அழைத்த ராணுவத்தினர் , கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்கள். பின்னர் ஜெகன் வீட்டுக்குச் சென்ற சில அதிகாரிகள் , இதனை வெளியே அல்லது மீடியாக்களுக்கு தெரிவித்தால் மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள் என எச்சரித்துள்ளார்கள்.
ஜெகன் தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்ற சம்பவங்கள் மைத்திரி அரசு மீது தமிழர்கள் வைத்திருக்கும் கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் தகர்பாதக இருக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten