தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

மட்டு அதிபர் அருட்தந்தை X.I. ரஜீவன் அருகில் திருடர்….

சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெற்றோரை போரில் இழந்த குழந்தைகளுக்காக செஞ்சோலை உள்ளிட்ட பல இல்லங்கள் நடத்தப்பட்டன.
போர் முடிவடைந்த நிலையில் கேபி என்ற குமரன் பத்மநாதன் செஞ்சோலை, பாரதி ஆகிய இல்லங்களை நடத்தி வருகிறார்.
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் உள்ள இந்த இல்லங்களின் 2வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கேபி பேசியதாவது:இந்த இல்லத்திற்கு வரும்போது சிறுவர்களின் மழலைச் சிரிப்பும், மகிழ்ச்சியும் பெருமையாக இருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை சிறுவர்களிடம் உருவாக்க எனக்கு 2ஆண்டு காலம் ஆகியுள்ளது.இவர்கள் கல்வியில் குறிப்பிட்டளவு சாதனை படைத்தாலும், ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியே அரவணைத்து அவர்களது உள்ளங்களை திறந்து மகிழ்ச்சியை உருவாக்க என்னாலான முயற்சியை செய்திருக்கிறேன்.
சிறுவர்கள் தமது துன்பங்களையும், தடைகளையும் கடந்து வந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தையின் மகிழ்ச்சியான மாற்றங்களை காணும்போது எமது மனம் மகிழ்கிறது.எனது எதிர்கால வாழ்க்கை தொடர்பாக பலரும் என்னை கேட்டபோது “நான் இறக்கும் வரை இந்த குழந்தைகளுடன் வாழவேண்டும்” என்ற எனது ஆசையை, கனவை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இவ்வாறு கேபி உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் சிறார் இல்லங்களைச் சேர்ந்த சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
26-1422273799-chencholai-600
26-1422273837-kumaran-pathmanathan-s11-60
26-1422273870-kumaran-pathmanathan-ss11-6
26-1422273762-kumaran-pathmanathan-kp-600
oneindia.com
http://www.jvpnews.com/srilanka/95589.html

மட்டு அதிபர் அருட்தந்தை X.I. ரஜீவன் அருகில் திருடர்….

காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளமாக திகழும் பாடசாலையை குறைந்தது ஒரு வருடத்திற்குள் கட்டடம் வேறு நிலம் வேறாக விற்று விடக் கூடிய வல்லமையுடையவர் இவர் காலத்தில் வாகரை பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்ட அரச திணைக்களகம் மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பன இன்று ஆபத்தான நிலையில் அத்துடன் வாகரை கூட்டுறவுச் சாலையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் நடந்த ஊழல்கள் எத்தனை எத்தனை இவற்றை அருட் தந்தை அறிவாரா அல்லது அறிந்தும் அறியாதது போல் நடிக்கிறாரா என்பது புரியாத புதிராக உள்ளது
இவரின் ஊழல்கள் தெரியாதவர்களே இல்லை இப்படிப் பட்ட சமூக விரோதிகளை வைத்து ஒரு மாவட்டத்தின் கல்விச் சொத்தான பாடசாலைக்கு மூடுவிழா செய்ய வேண்டாம் இவர் பாடசாலைக்குள் வருதை ஆயரில்லம் தடுக்கத் தவறுமானால் இப் பாடசாலையில் இவரின் நடவடிக்கையை இலங்கையின் ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் இவரின் சகல ஆதாரங்களும் விரைவில் வெளிவரும்…..Batti School 10Batti School 11
கல்விக்களகம்
திருமலை வீதி
மட்டக்களப்பு
பாடசாலை தொடர்பான செய்தி
கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) கத்தோலிக்க குருவானவர் ஒருவரை அதிபராக நியமிக்க கோரி கல்லூரிக்கு முன்னால் இன்று (26) காலை பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாடசாலையின் பிரதான வாயிலுக்கு முன்னால் ஒன்று திரண்ட பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1892ம் ஆண்டு ஒல்லாந்தர்(டச்சு) ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாசாலையில் சுமார் 3000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலையில் தொடர்ச்சியாக கத்தோலிக்க குருவானவர்களே அதிபராக இருந்து வந்ததுடன் தற்போது குருவானவர் இல்லாத ஒருவரை அதிபராக நியமிக்க நடவடிக்கைககள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கே.மாசிலாமணி மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட முக்கியஸ்தர்கள் ஸ்தலத்தில் நடாத்திய பேச்சு வார்த்ததையை அடுத்து அருட்தந்தை கே.ரஜீவன் அடிகளாரை அதிபராக நியமிப்பதென வலய கல்வி பணிப்பாளர் அளித்த வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.Batti School 01Batti School 02Batti School 03Batti School 04Batti School 05Batti School 06Batti School 07Batti School 08Batti School 09Batti School
 http://www.jvpnews.com/srilanka/95587.html

Geen opmerkingen:

Een reactie posten