தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

தமிழ் தலைமைகளுக்கு ஒரு கடிதம்!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் விடும் வெற்று அறிக்கைகள் வெறுமனே நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தீவில் இருந்து யாரும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வெறுமனே வெளியாகவில்லை என்பது முதலில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மைக்காய் குரல் கொடுத்தவர்களும் இன உணர்வாளர்களும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களும் சொந்த ஊரை விட்டு உறவுகளை விட்டு அகதிகள் எனும் கோணத்தில் அகதிகளாக நின்மதியாக தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது உலகறிந்த உண்மை.
தற்போது பரவலாக இலங்கையில் அரசியல் மாறிவிட்டது சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று நீங்கள் சர்வதேச அரங்குகளுக்கு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும்.
தற்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள வாக்கு விகிதாசாரத்தில் உங்களால் அங்கு ஒரு ஆட்சி செய்வதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்பது தெளிவாக விளங்குகின்றது அதன் காரணமாக உங்களது சுயநலனுக்காக மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற மிகுதி போரையும் பலிகொடுக்க வேண்டாம்.
நீங்கள் வரலாறில் பாரிய தவறு இழைத்து விட்டீர்கள் ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் தமிழர்களில் ஒரு பொது வேட்பாளர் காலத்தின் தேவை என நீங்கள் ராஜ தந்திரம் என்று பதிலுரைத்தீர்கள்.
இன்று அது உங்களுக்கு எமனாக வந்துள்ளது எப்படி பார்த்தாலும் இம்முறை உங்களால் பாரிய வெற்றியை வடக்கு கிழக்கில் பெறமுடியாது ஆட்சியமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது ஆகையால் போனஸ் ஆசனமும் இம்முறை உங்களை விட்டு கைநழுவும் என்பதில் ஐயம் இல்லை.
ஆகவே அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து புலம்பெயர் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் சால சிறந்தது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரமன்றி உங்களுக்கான கடமைகள் பல உள்ளன அவைகளை சற்று உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தை அகற்ற வேண்டும்.
மக்களின் காணிகளை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்
காணாமல் போனோர் தொடர்பாக அவர்களின் உண்மை நிலை அறிய வேண்டும்
படுகொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் தொண்டு பணியாளர்கள் இன உணர்வாளர்கள் தொடர்பான முழுமையான விசாரணை
கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்
ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்
சுயமாக ஒருவரின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
இதுபோன்று இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம் இவற்றுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் எவ்வாறு எந்த நம்பிக்கையில் மீண்டும் புலம்பெயர் உறவுகள் இலங்கை வருவது என்பது ஒரு பாரிய கேள்விகளாக உள்ளது.
ஆகவே இலங்கையில் உள்ள தலைமைகள் அறிக்கைகள் வெளிநாடுகளுடன் பேச்சுகள் நடத்தும் போது இனம் சார்ந்து சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் சுமூகமான ஒரு நல்ல தீர்வுகள் வரும்வரைக்கும் புலம்பெயர் தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டும் இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலை காரணமாக அமெரிக்காவுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்துவதாக தகவல்கள் அதையும் சற்று ஆழமாக பார்க்க வேண்டும்.
இலங்கை அகதிகள் நாட்டுக்கு திரும்புவதற்கு 30 ஆயிரம் யூரோக்கள் வரைக்கும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் அதுபோன்று அமெரிக்கா மற்றைய நாடுகளின் உதவிகளை நாடுவதாகவும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் எழுத்து மூலம் ஒரு பிரதியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன அகவே இலங்கை தலைமைகள் சற்று சிந்திக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
நாம் விரும்பி எம் மண்ணை விட்டு வெளியேறவில்லை மனிதர்கள் என்ற நாம் அகதி எனும் நாமத்தில் அலைகின்றோம் இது நாங்களாக தேடியதல்ல எம்மை தேட வைத்தது இலங்கை அரசு.

எஸ் கே
shashi.batti@gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv1.html

Geen opmerkingen:

Een reactie posten