தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

பெரும்பாலான ஈழ அகதிகள் நாடு திரும்ப விருப்பம் - நாச்சியப்பன்


ஈழ அகதிகளின் சொந்த காணிகள் திரும்ப வழங்கப்படுவதுடன், அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் பட்சத்தில், தமிழ் நாட்டில் உள்ள ஈழ அகதிகள் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அகதிகள் நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளனர்.
அதேநேரம் சிலர் இந்தியாவிலேயே தங்கி இருப்பதையே விரும்புகின்றனர்.
அவர்கள் இந்தியாவின் குடியுரிமையை கோருகின்றனர். அவ்வாறு இந்தியாவில் தங்கி இருக்க விரும்புகின்றவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாவர்.

அவர்கள் இந்திய பிரஜைகள்.

அதேநேரம் 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருந்தவர்களுக்கு சிறிலங்காவில் சென்று தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில், அவர்களும்; நாடு திரும்ப மறுக்கின்றர்.

மேலும் அகதிகள் தங்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

ராமநாதம்புரத்தில் அகதிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தியதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவ்வாறு இந்தியாவில் தங்கி இருக்க விரும்புகின்றவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாவர்.

அவர்கள் இந்திய பிரஜைகள்.

அதேநேரம் 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருந்தவர்களுக்கு சிறிலங்காவில் சென்று தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில், அவர்களும்; நாடு திரும்ப மறுக்கின்றர்.

மேலும் அகதிகள் தங்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். ராமநாதம்புரத்தில் அகதிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தியதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
30 Jan 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422632462&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten