தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

பிரித்தானிய தமிழர்களோடு நான் நிற்கிறேன்: போர் குற்ற விசாரணை தேவை !


பிரித்தானிய தமிழர்கள் இன் நாட்டுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை தாம் கண்டு பெரிதும் வியப்பதாக எதிர்கட்சி தலைவர் எட் மிலபான் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் வணிகத்தில் பிரித்தானியாவுக்கு சிறந்த பங்களிப்பை செய்து வருவதாகவும் லேபர் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் எப்பொழுதும் பிரித்தானிய தமிழர்கள் பக்கம் நிற்கவே விரும்புவதாகவும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மைத்திரி அரசு ஆக்கபூர்வமான விடையங்களை செய்யும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இலங்கை அரசானது சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு அனுமதி கொடுக்கவேண்டும். உள்ளூரில் நடத்தப்படும் விசாரணைகளை விடுத்து சர்வதேசம் நடத்தும் விசாரணைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று லேபர் கட்சி தலைவர் எட் மிலபான் அவர்கள்மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.. போர் குற்ற விசாரணைகளையும் இலங்கை ஐ.நாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முதல் கட்ட நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்தால் தான், அதன் உறுதியை மக்கள் நம்புவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். லேபர் கட்சி பிரித்தானிய தமிழர்களோடு நல்ல உறவை கட்டிக்காத்து வருகிறது. அதுபோல பல ஆண்டுகள் இந்த உறவு நீடிக்கவேண்டும் என்று தான் விரும்புவதாக எட் மிலபான் அவர்கள் தெரிவித்துள்ளார். எங்கே அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையில் ஆட்சிமாற்றம் வந்த உடனே தமது கோரிக்கைகளை கைவிட்டு விடுமோ என்று பலர் பதற்றத்தில் உள்ளார்கள். ஆனால் பிரித்தானிய லேபர் கட்சி தனது முடிவை இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளமை தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது எனலாம்.
http://www.athirvu.com/newsdetail/2132.html

Geen opmerkingen:

Een reactie posten