தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!

மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:06.46 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதுபற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.
தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு ஜனாதிபதி அதற்கு மறுத்து விட்டதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஜனநாயகம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளது.
மொஹான் பீரிசின் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளியாது என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfs6.html
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் சலுகைகள் ஒரே பார்வையில்!
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:49.06 AM GMT ]
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைககள் வழங்கப்பட்டன.
இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் பிரகாரம் மொத்த வருமானம் 1,622 பில்லியன் ரூபாவாகும் செலவு 2,121 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன் பற்றாக்குறை 499 பில்லியன் ரூபாவாகும்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஒரே பார்வையில்.
* அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு
* ஓய்வூதியக் கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிப்பு
* சமுர்த்திக் கொடுப்பனவு 100 முதல் 200 வீதம் அதிகரிப்பு
* உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்
* சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு 10 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
* மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 6 ரூபாவால் குறைப்பு
* சமயல் எரிவாயு 300 ரூபாவால் குறைப்பு
* சீனி கிலோ ஒன்று 10 ரூபாவால் குறைப்பு
* 400 கிராம் பால்மா பக்கற் 61 ரூபாவால் குறைப்பு
* ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவால் குறைப்பு
* பாண் ஒரு இறாத்தல் 6 ரூபாவால் குறைப்பு
* சஸ்டஜின் பால்மா 100 ரூபாவால் குறைப்பு
* ரின்மீன் 60 ரூபாவால் குறைப்பு
* அரச வங்கிகளில் 2 இலட்சம்வரை நகை அடகுவைத்து அதனை மீட்கமுடியாதவர்களின் வட்டிவீதம் தள்ளுபடி
* சீமெந்து ஒரு மூடை 90 ரூபாவால் குறைப்பு
* மாசி கிலோ ஒன்று 200 ரூபாவால் குறைப்பு
* சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 வீதம் குறைப்பு
* ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஒன்றாக இணைப்பு
* 1000 சீசீக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கான வரி 15 வீதத்தால் குறைப்பு
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கு
* அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு 24 மணி நேரமும் திறக்கப்படும்
* செல்போன்களுக்கான ரீலோட் வரி 25 வீதத்தால் குறைப்பு
* நாட்டிலுள்ள சகலருக்கும் வங்கிக் கணக்குகள்
* என்.ஆர்.எப்.சி கணக்கிற்கு 5 வீத வட்டி அதிகரிப்பு
* வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 5000 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகக் குறைப்பு
* 5000 ரூபாவாகவிருந்த திருமணப்பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாகக் குறைப்பு
* ஜனாதிபதி பதவியேற்புக்கு 6000 ரூபாய் மட்டுமே செலவு
* அமைச்சரவையை 71 இலிருந்து 31 ஆகக் குறைத்தோம்
* கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது
* கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். மொத்த தேசிய உற்பத்தியில் 4.6 சதவீதமாகும்
* ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது
* ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது
* கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்
* இளைஞர் பாராளுமன்றத்திற்கு நிதியளிக்கப்படும்
* 2013/2014 வரி வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட இலாபத்தை சம்பாதித்த கம்பனிகள் அல்லது
* தனிநபர்கள் இலாபத்தில் 25 சதவீதத்தினை செலுத்த வேண்டும்
* உழைக்கும் பொழுது செலுத்தும் வரியிலிருந்து ஊழிய வருமானத்தின் முதல் 600,000 ரூபா விலக்களிக்கப்பட்டுள்ளது
* உரிமம் அளிக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி இயக்குனர்கள் அனைவரிடமிருந்தும் 250 மில்லியன் ரூபா ஒரே தடவையில் அறிவிடப்படும்
* கடனட்டையினூடான கடன்களுக்கான வட்டியை 8 வீதமாக வரையறுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfs7.html

Geen opmerkingen:

Een reactie posten