தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்

கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு கடும் போட்டி: 18 பேர் களத்தில்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:18.06 AM GMT ]
கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் தேவாலய பஸ்நாயக்க நிலமே பதவியில் இருந்த சஷீந்திர ராஜபக்ஷ, அரசாங்க மாற்றத்தின் பின்னர் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.
இதன் காரணமாக தற்போது கதிர்காம பஸ்நாயக்க நிலமே பதவி வெற்றிடமாக உள்ளது.
இந்நிலையில் இந்தப் பதவியை கைப்பற்றும் நோக்கில் தற்போது சுமார் 18 பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே கதிர்காம தேவாலயம் அருகில் இருந்த மரமொன்றில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதையடுத்து, தேவாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgu0.html
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 07:51.00 AM GMT ]
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி, முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் நேற்று பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் பிரதமருடன் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விபரித்ததுடன் அது தொடர்பிலான ஆதாரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பிரத்தியேகமாக சந்தித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளதுடன் அவரிடமும் மேற்படி அறிக்கையை கையளித்துள்ளனர்.
அத்துடன் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இச்சங்கத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள ஊழல், மோசடி விசாரணைப் பிரிவிடமும் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் உட்பட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அவை தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளைகளில் தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முன்வரவில்லை என தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த ஊழல் மோசடிகளுடன் குறித்த பல்கலைக் கழகங்களின் உபவேந்தர்களுக்கும் உயர் கல்வி அமைச்சருக்கும் நேரடி தொடர்புகள் இருந்து வந்தமையினாலேயே தமது முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றும் தொழிற் சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன

ஜனாதிபதி - இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 09:21.02 AM GMT ]
இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
லங்கா சமசமாஜ கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வழங்கிய ஆதரவு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி பாராட்டியுள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு விரோதமாக செயற்பட்ட காரணத்தினால், கட்சிகளுக்குள் எதிர்நோக்க நேரிட்டமை குறித்து இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 09:50.34 AM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்த மத்திய அரசின் கொள்கையை கைவிட வேண்டும் என தமிழக முதலவர் ஓ. பன்னீர்ச்செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை - இந்தியா வெளியுறவு அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு சார்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
அக்கடிதத்தில், "இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை இத்தருணத்தில் மேற்கொள்வது சரியானதாக இருக்காது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதே சரியானதாகும்.
இலங்கையில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் இலங்கை ராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற இலங்கையின் புதிய அரசின் வாக்குறுதி செயல்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgu7.html

Geen opmerkingen:

Een reactie posten