[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 03:55.30 AM GMT ]
இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியின் பின்புறமாக மோதியது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவரும் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo1.html
நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:24.47 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ் வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன. இருந்த போதும் குறித்த பஸ் வண்டிகள் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சின் போக்குவரத்துப் பிரிவு மாதாந்தம் இரண்டு பஸ் வண்டிகளுக்கும் 18 இலட்சம் ரூபாவை குத்தகையாக வழங்கி வருகிறது. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் இயங்கும் வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே அமைச்சில் எவரும் கண்டிராத இந்த பஸ் வண்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரண்டு சாரதிகள் இந்த பஸ் வண்டிகளை வெளிவிவகார அமைச்சு வளாகத்தில் நிறுத்திச் சென்றதாகவும் அங்கிருந்த உயரதிகாரி ஒருவர் கூறினார். பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை மாதாந்தம் 18 இலட்சம் ரூபா குத்தகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, இது தொடர்பில் தனது தெரியாது என மறுத்துள்ளார். சஜின் வாஸ் குணவர்த்தனவை விசாரணை செய்யும்படியும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo6.html
கட்டாரில் வாகன விபத்து: இலங்கை விமான பணிப்பெண் பலி- ஹெயிட்டில் இலங்கை இராணுவ வீரர் பலி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:55.45 AM GMT ]
மேலும் விமானப் பணியாளர்கள் இருவர் உட்பட மற்றுமொரு விமானப்பணிப்பெண்ணும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் விமானப் பணிப்பெண் மாத்திரம் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊயழிர்கள் குழுவொன்று தோஹாவில் உள்ள பாலைவனம் ஒன்றில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெயிட்டில் இலங்கை இராணுவ வீரர் பலி
ஹெயிட்டியில் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் கடமையாற்றி வந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எஸ். புஷ்பகுமார என்ற 39 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரணசூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ள புஷ்பகுமார இராணுவ விசேட படைப் பிரிவின் 17 படநெறியை பூர்த்தி செய்த அதிகாரியாவார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceo7.html
Geen opmerkingen:
Een reactie posten