தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்



வாகரை வறிய மக்களுக்கு ஆஸி. தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பு உதவி
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2015, 03:47.40 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான இறாலோடை கிராம மக்களுக்கு அவுஸ்ரேலியா தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பின் நிதி உதவி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக நேற்று மாலை வழங்கப்பட்டது.
இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.
இதன்போது பேரவை பிரதிநிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உட்பட்ட பொருட்களை அடங்கியதாக 154 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அவுஸ்ரேலியா தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பின் நிருவாகத்தினருக்கு நன்றியை தெரிவித்துள்ளது. அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRdKcfs4.html
கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 12:46.28 AM GMT ]
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 13வது சரத்தை இலங்கை மத்திய அரசில் முழுமையாக அமுல்நடாத்தவிருக்கும் அதாவது, அதிகாரங்களை பங்கிடவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியாளர்களாக த.தே..கூட்டமைப்பு மாற வேண்டும் என மாகாணசபை இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
கிழக்குவாழ் தமிழ் மக்கள் அண்மைக்கால நகர்வுகளை மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒரு அடி சறுக்கினாலகூட பின்னர் அவர்களை கூட்டிணைக்க முடியாமல் போய்விடும். கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் சென்று மக்களின் உணர்வலைகளை சுவாசித்தபோது அவர்கள் கிழக்குமாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் வருவதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணமுள்ளார்கள்.
மக்களின் உணர்வுகளை அபிலாசைகளை மதியாமல் நாம் அரசியல் நடாத்தமுடியாது.
கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதென்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இதனை யாரும் விட்டுத்தர வேண்டிய அவசியமில்லை. இது தமிழ்மக்களின் உரிமையேயன்றி சலுகையல்ல.
இதில் இனரீதியாக கணக்குப் போட்டுப்பார்ப்போரும் உள்ளனர். கடந்தஅரசோடு செய்த உடன்படிக்கை கடந்தஅரசோடு முடிவடைந்துவிட்டது.அதனை இன்னமும் பேசிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை.அதுகாலாவதியாகிவிட்டது.
இது விடயத்தில் தமிழ்த் தலைமைகள் துரதிருஸ்டியோடு நடந்து கொள்ளவேண்டும். தவறினால் அடுத்துவரும் இரண்டரை வருட காலத்திற்கு கிழக்குத் தமிழர்களை நட்டாற்றில் விட்டதற்கு சமனாகிவிடும்.எனவே தமிழ்முதலமைச்சர் என்பதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை.
ஆளும் அரசு இதற்கு பச்சைக் கொடிகாட்ட வேண்டும். இன்றேல் மத்தியஅரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகநேரிடும்.
இன்றேல் கலைத்துவிட்டு தேர்தலை நடாத்துங்கள். பலப்பரீட்சையில் இறங்குவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfs5.html


Geen opmerkingen:

Een reactie posten