தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு!

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 03:42.26 AM GMT ]
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யப்பட வேண்டுமென பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து விசாரணைகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களை பாதுகாக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கைதுகளும் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படும். தற்போது மூன்று முக்கியமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அலரி மாளிகையில் இடம்பெற்ற சூழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி செயலக வாகனங்கள் காணாமல் போனமை மற்றும் வெலோ சுதா போதைப்பொருள் வர்த்தகம் ஆகியன தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று பொலிஸ்மா அதிபரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft7.html
ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இப்படித்தான் மகிந்த காட்டினார்!
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 05:57.49 AM GMT ]
ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்றுவேன் என கூறிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தனது ஜனாதிபதியின் காரியாலயத்தி்றகான அரச செலவாக சுமார் ரூபாய் 311,390 மில்லியனை ஒதுக்கி செலவு செய்யாமையே ஆகும்.
இதன்படி, 2009ஆம் ஆண்டு 6340 மில்லியன்
2010 ஆண்டு 7650 மில்லியன்
2011 ஆண்டு 50630 மில்லியன்
2012 ஆம் ஆண்டு 59360 மில்லியன்
2013 ஆம் ஆண்டு 82440 மில்லியன்
2014 ஆண்டு 104970 மில்லியன்
2015 மேலதிகமாக 9593 மில்லியன்
இப்படியான தொகையில் சிறப்பாக வாழ்ந்த மகிந்த ஓர் ஆசியாவின் ஆச்சரியமே

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:44.52 AM GMT ]
இலங்கையின் புதிய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கண்காணிப்பகம், நேற்று நியூயோர்க்கில் வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
656 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் முன்னைய இலங்கை அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அனைத்துவித மனித உரிமைமீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என்று கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கென்னத் ரொத் வலியுறுத்தியுள்ளார்.
தமது அறிக்கை தயார்ப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த அரசாங்கம் எடுத்துள்ள சில நடவடிக்கைகள், காத்திரமானவையாகும் என்று கண்காணிப்பகம் குறி;ப்பிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை மீண்டும் இயங்கச் செய்தமை, 2009இல் கொல்லப்பட்ட செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கின்றமை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன.
இதற்கிடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஐக்கிய நாடுகளால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் அந்த விசாரணைகளை இலங்கையின் முன்னாள் அரசாங்கம் முற்றாக நிராகரித்து வந்தது.
இதேவேளை போருக்கு பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றங்களின்போது தமிழர்களின் நிலங்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் ராஜபக்சவின் அரசாங்கம் செயற்பட்டதாகவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டிள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft2.html

Geen opmerkingen:

Een reactie posten