[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 12:52.34 PM GMT ]
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கினர். படுவான்கரைக்கு செல்லும் முச்சக்கரவண்டிகள் அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் தனி நபர் கட்டண அறவீடுகளை மேற்கொள்வதாகவும் கூறியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனத் நந்தவல தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றது.
படுவான்கரை பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடுவது எனவும் சட்டத்துக்கு முரணாக ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp5.html
ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிறி ஏக்கநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:08.51 PM GMT ]
சிரேஸ்ட ஊடகவியலாளரான தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
தர்மசிறி தனியார் ஊடகமொன்றில் செய்தி தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரையில் தர்மசிறி அந்த தனியார் நிறுவனத்தில் செய்திப் பிரிவில் கடமையாற்றி வந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp6.html
எனக்கு எதிராக குரோதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: மஹிந்த ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:26.33 PM GMT ]
தங்காலை கார்ல்டன் இல்லத்திலிருந்து வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
அண்மைக் காலமாக ஊடகங்களில் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக மிக மோசமான வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை.
சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரங்களைப் போன்று கடந்த 9ம் திகதி அதிகாலையில் அலரி மாளிகையில் இராணுவ சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சுமூகமான முறையில் நான் அலரி மாளிகையை விட்டு வெளியேறினேன்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் எனது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான சேறு பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.
அலரி மாளிகையின் உட்பகுதியில் மக்கள் பணத்தில் பாரியளவில் ஆடம்பர கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனினும் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் வசதி கருதி, கழிவறகைளில் காற்று சீராக்கி பொருத்தப்பட்டது.
எனது மனைவி தங்கம் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸாரே பதிலளித்துள்ளனர். அதனால் அது பற்றி பேசப் போவதில்லை.
எனது அரசாங்கம் ஊழல், விரயம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் பற்றி மக்களிடம் பிழையாக காண்பிக்கும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக ஜனாதிபதி தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgp7.html
குடிவரவு திணைக்களத்தினால் குமார் குணரட்ணத்திற்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:39.38 PM GMT ]
திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பன்னிப்பிட்டியவில் உள்ள முன்னிலை சோஸலிச கட்சியி;ன் காரியாலயத்துக்கு சென்று குமார் குணரட்ணத்தின் சாட்சிப்பதிவுக்கான அறிவிப்பை விடுத்தனர்.
எனினும் அந்த நேரத்தில் குமார் குணரட்ணம் அங்கு இருக்கவில்லை.
அத்துடன் அவர் எங்கிருக்கிறார் என்பது தமக்கும் தெரியாது என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவரை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக அலுவலகத்தில் உள்ளவர்கள் குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgqy.html
Geen opmerkingen:
Een reactie posten