தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள்- கலாபுரயில் 5000 தேர்தல் குடைகள் கைப்பற்றல்

தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை! ஐ.தே.க.வுக்கே தோல்வி: பியசேன கமகே
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 04:52.40 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தோல்வி கிட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குத்தான் வெற்றி கிட்டியுள்ளது என்பதைப் போன்ற உற்சாகத்தில் காணப்பட்டனர். ஆனால் தற்போது அவர்களின் உற்சாகம் குறைந்துள்ளது.
நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை. சாதாரண பின்னடைவு ஒன்று மட்டுமே ஏற்பட்டது. எதிர்வரும் நாட்களில் அந்தப் பின்னடைவு சரிசெய்யப்படும்.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவார். பலமிக்க கட்சியாக நாங்கள் மீண்டும் எழுந்து வருவோம்.
எங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவிக்கான முகம் மட்டும் தான் மாறியுள்ளது. தவிர எங்கள் கட்சி தோற்கடிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தான் இந்தத் தேர்தலிலும் தோல்வி கிட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgs5.html
பெற்ரோலிய கூட்டுத்தாபனம் பணம் திண்ணும் பேய் அல்ல: பாட்டலி சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 05:18.18 AM GMT ]
இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் பணம் திண்ணும் பேய் அல்ல என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் பாரிய நஷ்டம் அடைவதற்கான காரணம் பதவியில் இருந்த அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளாகும் என தெரிவித்தார்.
பெற்ரோலிய கூட்டுத்தாபனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக தேடிபார்ப்பதற்கு தன்னால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொலன்னாவையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்தவிற்கு பிணை
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 05:35.35 AM GMT ]
கைது செய்யப்பட்டிருந்த வட மேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நீதிமன்றத்தினால் குறித்த பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று குறித்த அமைச்சர் ஆனைமடு பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஐ.தே.கட்சி அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிஷாந்த மீது முறைப்பாடு கிடைக்க பெற்றிருந்தது.
பின்னர் புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் நீதவான் விசாரனையின் பின்னர் ரங்க திஸாநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி முன்னாள் இராணுவ மேஜர் போராட்டம்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 05:51.26 AM GMT ]
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அசித பிரபாத் என்ற கைதியே கடந்த 26 ஆம் திகதி முதல் சாகும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தான் உட்பட சகல அரசியல் கைதிகளுக்கும் கஷ்டங்களை ஏற்படுத்தியிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியே அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அடிப்படையற்ற சாட்சியங்களை கொண்டு வழக்குகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹெந்தாவித்தாரண என்ற இராணுவ அதிகரிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக பொய்யான வழக்கை ஜோடித்து தன்னை சிறையில் அடைத்துள்ளதாகவும் அசித பிரபாத் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கை முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இருப்பதாக மன்னார் ஆயர் வணக்கிற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgty.html
பிரதம நீதியரசரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்- விலக தயாராகும் நீதியரசர்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 05:52.49 AM GMT ]
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பிரதம நீதியரசருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஏந்தியிருப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதம நீதியரசர் பதவி விலக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய இடத்திற்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டார நாயக்க நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள்- கலாபுரயில் 5000 தேர்தல் குடைகள் கைப்பற்றல்
[ புதன்கிழமை, 28 சனவரி 2015, 06:08.24 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் ஆரம்பம் முதல் இதுவரையில் 200 முதல் 230 வரையிலான கையூட்டல் முறைப்பாடுகள் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுமார் 150 கையூட்டல் தொடர்பிலான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து முறைப்பாடுகளும் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் போதியளவு சாட்சியங்களுடன் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் செய்யப்பட்ட கையூட்டல் முறைப்பாடுகளில் சிலரை விசாரணை செய்யத்தக்களவு காரணிகளுடன் முறைப்பாடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.
தேவை ஏற்பட்டால் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
கலாபுரயில் 5000 தேர்தல் குடைகள் கைப்பற்றல்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களினாலான 5 ஆயிரம் குடைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.
கல்கிஸை, கலாபுர பகுதியில் மூடப்பட்டிருந்த கட்டிடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குடைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgt1.html

Geen opmerkingen:

Een reactie posten