[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:03.15 AM GMT ]
அரசாங்கத்தின் நூறு நாள் செயற்றிட்டத்தின் பின்னர் தேர்தலுக்கு தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாக உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
வெற்றிடமாகியுள்ள கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள், கட்சிக் கிளை அலுவலகங்கள் அங்குரார்ப்பணம் செய்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமிற்கு பிரதமர் ரணில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfw7.html
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் 3302 கோடி ரூபா மோசடி
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:06.58 AM GMT ]
அப்போதைய பிரதி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரும் இணைந்து இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஊழல் தவிர்ப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்த சகல தகவல்களும் எம்மிடம் உண்டு. இது தொடர்பில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும்.
இந்த மொத்த தரகுப் பணம் 1716 கோடி மற்றும் 1586 கோடி என்ற அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது.
சீன நிறுவனமொன்று நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உற்பத்தி செய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டமைக்காக டி சில்வா என்பவருக்கு இந்த மொத்த தரகுப் பணத்தையும் வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என வசந்த சமரசிங்க நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfxy.html
சேவை மூப்பு அடிப்படையில் பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டார்: அரசாங்சகம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:11.51 AM GMT ]
பிரதம நீதியரசராக, சிரேஸ்ட நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்பட்டமை சேவை மூப்பின் அடிப்படையிலாகும்.
நீதியரசர் சிறிபவனே இன்று நாட்டில் சேவையாற்றி வரும் நீதியரசர்களில் சிரேஸ்டமானவர்.
அரசியல் அமைப்பு திருத்தங்களின் பின்னர் பிரதம நீதியரசர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அதுவும் சேவை மூப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
ஓய்வு பெற்ற நீதவான்களின் குழு ஒன்றை அமைத்து பிரதம நீதியரசர் நியமனம் குறித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்ட விதம் பிழையானது என ராஜித சேனாரட்ன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfxz.html
கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:15.56 AM GMT ]
இதுவரையில் வெளியிடப்படாத பல்வேறு தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஏற்கனவே ஜே.வி.பி. முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்லின் எனப்படும் விமானங்களை இந்தோனேஷியாவிலிருந்து இலங்கைக்கு குமரன் பத்மநாதனே கொண்டு வந்துள்ளார்.
பங்களாதேஷின் விவசாய நிறுவனமொன்றிடமிருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமரன் பத்மநாதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx0.html
Geen opmerkingen:
Een reactie posten