தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !

இன்றைய தேதியில் இணையத்தில் கலக்கோ கலக்கிவரும் மகிந்தவின் "டாப்" கேலிச் சித்திரங்கள் !

[ Jan 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 45265 ]
இன்றைய தேதியில் பேஸ்புக் மற்றும் இணையத்தில் கலக்கோ கலக்கு என்று கலக்கிவரும் மகிந்தவின் "டாப்" கேலிச் சித்திரங்கள் இவைதான். புகைப்படங்கள் இணைப்பு.
http://www.athirvu.com/newsdetail/2073.html

பாத்ரூமுக்கு செல்லுமாறு கூறி என்னை கட்டிப் பிடித்து கற்பழித்தார்: கொழும்பு ஏர்போட்டில் !

[ Jan 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 71975 ]
மகிந்தரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு மட்டும் தான் கொடுமை நடந்தது என்று நாம் ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நாட்டிற்கு வந்த சூவீடன் பெண் ஒருவரை, சிங்கள காவலாளி ஒருவர் ஏர் போட்டில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்திற்கு தனியாக வந்த சுவீடன் நாட்டுப் பெண் ஒருவரை சோதிக்கவேண்டும் என்று கூறி, பாத்ரூமுக்கு போகும்படியும், அங்கே பெண் சோதனையாளர் ஒருவர் வந்து உங்களை சோதிப்பார் என்றும் கூறியுள்ளார் ஒரு விமான நிலைய அதிகாரி. ஆனால் குறித்த இடத்திற்கு சென்ற பெண் அதிர்ந்து போனார். அது பாத்ரூம் அல்ல.
கிளீனிங் பொருட்களை வைக்கும் அறை. உடனே அங்கே நுளைந்த குறித்த சிங்கள அதிகாரி, சுவீடன் பெண்ணை கட்டிப்பிடித்து , பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 45 நிமிடங்கள் கழித்து அப்பெண் மேல் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யும் வேளை இந்த வீடியோ பதிவாகியுள்ளது. ஆனால் இதுவரை இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிடப்பில் இருந்த இந்த வீடியோ தற்போது சில மீடியாக்களுக்கு கசிந்துள்ளது. சுவீடன் நாட்டுப் பெண்ணிடம் விசாரிக்கும் அதிகாரி, இச்சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம். நாம் சீக்கிரெட்டாக(ரகசியமாக) விசாரிப்போம் என்று கூறி தாஜா செய்வதையும் வீடியோவில் காணலாம்.
http://www.athirvu.com/newsdetail/2074.html

மகிந்த ராஜபக்ஷவின் ஏர் -போட் கொள்ளை: இதோ வீடியோ இணைக்கப்பட்டுள்ளது !

[ Jan 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 54565 ]
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை, பாதுகாப்பு துறை அமைச்சு அவர் கைகளில் தான் இருந்தது. அதன் கீழ் நேரடியாக இயங்கிவந்த கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்தில் நடக்கும் கூத்தைப் பாருங்கள். சோதனை நடக்கும் வேளையில், சப்பாத்திற்குள்(சூ) கசை வைத்து கொடுக்கிறார்கள். பாஸ்போட்டுக்கு கீழ் காசை வைத்து கொடுக்கிறார்கள். பின்னர் சில பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல், நேரடியாகவே காசைப் பெறுகிறார்கள். இவை தமிழ் பெண்களை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை குறிவைத்தே நடக்கிறது.
வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு(மத்திய கிழக்கு நாடுகளில்) வேலைசெய்துவிட்டு நாடு திரும்பும் பெண்களிடம் இந்த அதிகாரிகள், பெரும் பணத்தை கறக்கிறார்கள். இவை டினாரில் அல்லது டாலரில் இருக்கிறது. பணத்தை கொடுத்தால் மாத்திரமே அவர்கள் கொண்டு வரும் பொருட்களை அனுமதிக்கிறார்கள். இல்லையென்றால் வேண்டும் என்றே இழுத்தடித்து அலைய விடுவார்கள். மேலும் வீட்டு பாவனைக்காக அவர்கள் கொண்டு வரும் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்றும் கூறிவிடுவார்கள். இப்படியாக கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. CCTV கமரா இருக்கிறது என்று தெரிந்தும் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள், என்றால் யார் இந்த துணிச்சலைக் கொடுத்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? தற்போது ஆட்சி மாறிவிட்டது. ஆனால் பழைய CCTV டேப்பை அழிக்க சிலர் மறந்து விட்டார்கள். இதனால் இந்தக் கொள்ளை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2072.html

என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !

[ Jan 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 21610 ]
"நான் கடவுளை நன்கு வணங்குபவன்". கொள்கை உடையவன். என் மீது கை வைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அன்று என்னை அலரிமாளிகைக்கு அழைத்து , அறைக்கு அழைத்துச் சென்று தாக்கிய பின்னர்தான் நான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடு செல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால் இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எமது கொழும்பு செய்தியாளரிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கிய சம்பவம் குறித்து மேர்வின் மேலும் விவரிக்கையில், 'உங்களுக்கு நினைவிருக்கும் நான் களனியில் விடுதி ஒன்றை இழுத்து மூடியவிதம். விடுதி உரிமையாளர்கள் இதுகுறித்து பசில் திருடனுக்கு அறிவித்துள்ளனர். பசில் அதுபற்றி ஜனாதிபதியிடம் ஒன்றுக்கு இரண்டாக தொலைபேசியில் போட்டுக் கொடுத்துள்ளார். திடீரென என்னை அலரி மாளிகைக்கு வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. நான் உடனே அங்கு சென்றேன். என்னை கண்டதும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றார். நான் எதும் இரகசியம் சொல்லவோ என நினைத்தேன். திடிரென என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நான் ஒருபொழுதும் கைநீட்டவில்லை. பின் வெளியே வா என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார். நான் அதன்பின் அங்கு இருக்கவில்லை.
உடனே ஜீப்பில் ஏறினேன். என் நிலையை பார்த்து 'ஏன் சார் ?' என்று எனது பாதுகாப்பு தரப்பினர் கேட்டனர். அப்போது நான் அழுதேன். பின் நான் லுசிடாவிற்கு (மனைவி) அழைப்பெடுத்து நடந்ததை கூறி அழுதேன். அதனை பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார் ' தற்போது போகும் நிலையை பார்த்தால் ஜனாதிபதிக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது சார்' என்றார். நான் பொய் சொன்னால் அவரையே கேளுங்கள். இதோ உள்ளார் அவர்;' என்று மேர்வின் கூற எமது செய்தியாளர் அவரை பார்த்தபோது அவர் தலை அசைத்து உண்மை என்று கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார். கெட்ட கேட்டுக்கு இதுக்கு சாட்சியை வேறு வைத்துக்கொண்டு மேர்வின் சில்வா அலைந்து திரிகிறார். இதில் ஊடகவியலாளரை மரத்தில் கட்டிவைத்து அடித்து பெரிய தாதா போல எல்லாம் பிலிம் காட்டி இருக்கிறார் மேர்வின் சில்வா ...
இது குறித்து மேலும் விவரித்த மேர்வின் ' எனக்கு முன்னர் இவ்வாறு பலரை மஹிந்த தாக்கியுள்ளார். பஸ் கெமுனு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் வாகிஸ்ட போன்றோர் , அனைத்து பெயர் விபரங்களும் உள்ளது என்றார். மகிந்தவிடம் அடி வாங்கிய அனைவரது பெயர் பட்டியலும் மேர்வினிடம் உள்ளதாம். அதில் பாதிபேர் நிச்சயம் எதிர்கட்சிக்கு தாவி இருப்பார்கள் போல இருக்கே ?
http://www.athirvu.com/newsdetail/2096.html

Geen opmerkingen:

Een reactie posten