தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய பயணம்! 'விடுதலைச் சுடர்' போராட்டம்!

15 கோடி ரூபா செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட அரசாங்க அதிகாரிகள்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:05.03 AM GMT ]
சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பல அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 04 ஆண்டுகளிலும் 15 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
இதனைவிட மத்தளை விமான நிலையத் திறப்பு விழாவில் பங்குபற்றிய அதிகார சபையின் அதிகாரிகள் சிலரின் இருநாள் ஹோட்டல், உணவு, பானம் ஆகியவற்றுக்கு 07 இலட்ச ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் அரச பணத்தை நாசம் செய்தமை தொடர்பாக பதில் வழங்குமாறு அரச கணக்காய்வாளர் நாயகம் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார்.
தன்னிச்சையாக பணிப்பாளர் நாயகம் செயற்பட்டுள்ளார். அரச சுற்றறிக்கைகள், உத்தரவுகள் கருத்திற்கொள்ளப்படவில்லை.
தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் வெளிநாட்டு விஜயங்களுக்கான தகுதியான காரணத்தைத் தெரிவிக்காது, அமைச்சு செயலாளரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விஜயங்களில் பங்குபற்றும் சகல அதிகாரிகளும் வெளிநாடுகளில் நடந்த கருத்தரங்குகள் மூலம் தாம் பெற்ற நன்மைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் எவரும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லையென தெரிவித்துள்ளது.
அதிகார சபைக்கு நிரந்தரம் கட்டடம் பெறுதல் உட்பட மேற்கொள்ளப் படவேண்டிய பல விடயங்கள் இருந்தும் அதிகாரிகள் சிலருக்காக கோடிக்கணக்கான அரச நிதி தாறுமாறாகச் செலவிடப்பட்டுள்ளது.
இந்த அதிகார சபையின் ஊழல் மோசடிகள் ஊடகங்களில் பிரசுரமாவதைத் தடுக்க அதிகார சபை 80, 000 ரூபா சம்பளத்தில் ஒருவரைச் சேவையில் நியமித்துள்ளது.
பத்திரிகை நிறுவனங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து பல செய்திகளை இந்த அதிகாரி பிரசுரம் பெறாமல் தவிர்த்தும் வந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu4.html

தனியார் பஸ் கட்டணங்கள் குறைப்பு - இறுதித் தீர்மானம் இன்று
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:20.01 AM GMT ]
தனியார் பஸ் கட்டணங்களை குறைப்பது குறித்து இன்று  இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
போக்குவரத்து அமைச்சருக்கும் தனியார் பஸ் சங்கங்களுக்குமிடையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது எத்தனை வீதத்தினால் கட்டணங்களைக் குறைப்பது என முடிவு செய்யப்படும். இது இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக கட்டண குறைப்பை அமுல் செய்ய இருப்பதாக உள்ளக போக்குவரத்து அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
தனியார் பஸ் கட்டணங்கள் 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குமிடைப்பட்ட வீதத்தினால் குறையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வட்டாரங்கள் கூறின. கட்டண குறைப்பு நாளை  முதல் அமுலாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை கடந்த 21 ஆம் திகதி முதல் 16 வீதத்தினால் குறைக்கப்பட்டது. கடந்த வருட இறுதியில் 7 ரூபாவினாலும் 3 ரூபாவினாலும் டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பஸ் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ்கட்டணத்தை குறைக்க உள்ளக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
பஸ்கட்டணத்தை 8 வீதத்தினால் குறைப்பதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ள போதும் பஸ் கட்டணம் 10 வீதத்தினால் குறையலாம் என நம்பப்படுகிறது. ஆரம்ப கட்டணம் 9 ரூபாவால் இருந்து 8 ரூபாகுறையும் எனவும் அறியவருகிறது.
புதிய கண்டணப்பட்டியல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை, உதிர்ப்பாக விலை, நிர்வகிப்பு செலவு, ஊழியர் சம்பளம் உட்பட 12 அம்சங்களின் அடிப்படையில் பஸ்கட்டண விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஒவ்வொருவருடமும் ஜுலை மாதத்தில் பஸ் கட்டண விலைகள் சீரமைக்கப்படுகிற போதும் கடந்த வருடம் கட்டணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை.
உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் தனியார் பஸ் சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு உள்ளக போக்குவரத்து அமைச்சில் நடைபெறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchu5.html
அழுத்தங்களுக்கு மத்தியிலும் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் தொடர்வார்: விஜெரட்ன கொடிப்பிலி
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 01:50.31 AM GMT ]
சட்டத்தரணிகள் சங்கம் எந்த அறிவித்தல்களை விடுத்தாலும் அதனை பொருட்படுத்தாது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தமது பணியை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதம நீதியரசரின் பேச்சாளர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சட்டத்தரணி விஜெரட்ன கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் புரட்சி முயற்சியில் மொஹான் பீரிஸூம் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை பதவி விலகுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்து வருவது குறி;ப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி இலங்கை தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்- ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 02:16.54 AM GMT ]
இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்று இலங்கையின் பிரதமர் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத்தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அதில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
இலங்கையும் இந்தியாவுடன் வரலாற்று உறவுகளை புதுப்பித்து இணைந்து செல்ல தயாராகவுள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் வர்த்தகர்கள்ää இந்தியாவுடன் வர்த்தகத்தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வழமையாக அமைச்சர்களே இந்திய குடியரசுத்தின நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்குபற்றுவர்.
எனினும் நேற்று இந்த நிகழ்வில் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்று ராஜதந்திர முறைமையை மாற்றியுள்ளதாக இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட்டோரும் பங்கேற்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchvz.html
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய பயணம்! 'விடுதலைச் சுடர்' போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 02:26.48 AM GMT ]
ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற ஐநா சபையின் 28ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு 'விடுதலைச் சுடர்' எனும் பெயரில் மனிதநேயப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா வரைக்கும் செல்லுகின்ற இப் போராட்டமானது, திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பைத் செயற்படுத்திக்கொண்டு வருகின்ற சிங்களப் பேரினவாதத்தின் சுதந்திர நாளானதும் ஈழத்தமிழர்களின் கரி நாளானதுமான பெப்ரவரி 4ம் திகதி இலண்டனில் ஆரம்பமாக உள்ளது. இது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக 40 நாட்கள் பயணம் செய்து சுவிஸ் ஜெனிவாவை 16.02.2015 அன்று சென்றடைய உள்ளது.
ஐநா இல், மனிதவுரிமைகளுக்கான சபையில் தற்பொழுது அங்கம் வகிக்கின்ற பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கூடாகச் செல்லும் இந்த மனிதநேயப் போராட்டமானது ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் 'விடுதலைச் சுடர்' இனை கையில் ஏந்தியவாறு உலக மக்களுக்கும் அரசில் பிரமுகர்களுக்கும் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் சந்திப்புக்களும் நடைபெறவுள்ளன.
பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகின்ற இப்போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் தார்மீகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
விடுதலைச் சுடர் போராட்டத்தின் கோரிக்கைகள் பின்வருமாறு :
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு, தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchv0.html

Geen opmerkingen:

Een reactie posten