[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 11:06.35 AM GMT ]
வயலும் வயல்சார்ந்த வாழ்வுமான சூழலிலும் இன்னொரு புறத்தில் ஆனையிறவு உப்பளத்தை அண்டிய உவர் நிலப்பதிச்சூழலிலும் இந்த கிராமங்கள் கிளிநொச்சி பிரதான நகரத்தில் இருந்தும் சிறுநகரமான பரந்தன் நகரத்தில் இருந்தும் தொலைவில் வாழ்வை நடத்திக்கொண்டு போக்கு கல்வி சுகாதாரம் மின்சாரம் வீட்டுவசதி போன்ற பல்வேறு தேவைகளில் புறந்தள்ளப்பட்டு ஏழை மக்களின் குடிநிலமாக காணப்படுகின்றன.
மழை காலத்தில் இந்தக்கிராமங்களை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.போகின்ற பாதைகளிலும் கிராமத்திலும் வெள்ளக்காடாகவே இருக்கும்.
இந்தக்கிராமத்துக்கான பாடசாலைகள் தொலைவுகளில் உள்ளன. இந்தக் கிராமத்தின் பிள்ளைகள் கிளி புனிததிரேசாள் கல்லூரிக்கோ அல்லது கிளி பரந்தன் இந்து மகா வித்தியாலத்துக்கோ செல்ல வேண்டும்.
பத்திரிகைகள் இந்தக் கிராமத்தின் பொதுநோக்கு மண்டபங்களிலோ அல்லது சனசமுக நிலையங்களிலோ இல்லை. அதை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கள் தூக்கத்தில் இருக்கின்றன.
அண்மையில் அங்கு பார்க்கக்கிடைத்த அதிர்ச்சி என்னவென்றால் கடந்த தேர்தலுக்கு முன் காஞ்சிபுரம் கிராமத்துக்கு தருவதாக கூறி பறிக்கப்பட்ட மின்கம்பங்களும் அதற்கான உபகரணங்களும் கொஞ்சம் நாளுக்காக மின்சார சபையினர் ஏற்றிச்செல்கின்றார்கள்.
ஆங்காங்கு மக்கள் தேவைக்காக வந்த மின்சார இணைப்பிற்கான உபரணங்கள் மழையிலும் வருந்தி சிதறிக்கிடக்கின்றன.கொஞ்ச மின்கம்பங்கள் இன்னும் உறக்கத்தில் கிடக்கின்றன.
அயல்கிராமங்களும் மனிதர்கள் நடமாட்டமற்ற பலவீதிகளும் மின்சாரத்தால் ஒளிர்கையில் வாழவும் பிள்ளைகளில் கல்வி எதிர்காலத்துக்காக கனவுகண்டும் இருக்கின்ற மக்களால் நிரம்பிய ஏழைக்கிராமமான பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்குமா.மின் கம்பங்களையும் அதில் குந்தியிருக்கும் காகங்களையும் அதில் சிக்குப்படும் காற்றாடிகளையும் இந்தக்கிராமத்து மனிதர்கள் காணும் வருமா.மக்கள் யாரையும் ஏமாற்றவில்லை.ஆனால் மக்களை ஏமாற்றுகின்றார் பலர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq4.html
மட்டக்களப்பு வாவி எல்லைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 11:35.56 AM GMT ]
கரையோரம் பேணல் திணைக்களத்தினால் அப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கென இபாட் நிறுவனம் 33 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.320 கிலோ மீற்றர் நீளமான வாவி 14 ஆயிரம் கட்டைகள் போடப்பட்டு எல்லைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவி கல்லாறு முதல் ஏறாவூர் வரையான 70 கிராம சேவகர் பிரிவுகளையும் 8 பிரதேச செயலக பிரிவுகளையும் உளளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட குடிநீர் திட்டத்தினை மேற்கொள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோடை காலங்களில் அதிகளவில் குடிநீர் பிரச்சினையினை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நகர அபிவிருத்தி நீர்வழங்கழங்கல் வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் கல்குடா தொகுதி மற்றும் மட்டக்களப்பு தொகுதி ஆகியவற்றுக்கு குடிநீரைப்பெற்றுக்கொடுப்பதற்கான உயர்மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி நீர்வழங்கழங்கல் வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஓட்டமாவடி,வாழைச்சேனை,கிராண் உட்பட பல பகுதிகளுக்கு நீர்விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
கித்துள்-உறுகாமம் குளங்களை இணைத்து நீர்விநியோக திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது நீண்ட காலத்திட்டம் என்ற வகையில் குறுகிய காலத்திற்குள் திட்டம் ஒன்றை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறுக்கிய காலத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் உன்னிச்சைகுளத்தில் இருந்து குடிநீர் திட்டத்தினை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்துடன் அதற்காக 20 பில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் பொறியியலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்கீழ் அந்த திட்டத்திற்கு தேவையான நீதியினைப்பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் குறித்த திட்டத்திற்கு தேவையான நடவடிக்கையினை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq5.html
மகிந்த அரசு மூடி மறைத்த முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 11:51.28 AM GMT ]
முறைப்பாடுகள் தொடர்பான ஆவணங்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி முறைப்பாடுகளில் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளும் அடங்குவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள், இலஞ்சம் மற்றும் விலை மனுகோரல் உள்ளிட்ட விடயங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
முன்னைய அரசாங்கத்தின் அதிகாரமிக்கவர்களின் உத்தரவுக்கு அமைய விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணை தொடர்பான கோப்புகளை மறைத்து வைத்திருந்தனர்.
பிரதேச சபைகளின் தலைவர்களே பெருமளவில் மோசடிகளை செய்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKceq6.html
Geen opmerkingen:
Een reactie posten