[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 05:42.49 AM GMT ]
செழிப்புமிக்க தாய்நாடு, அபிமானமிக்க நாளைய தினம் என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திர தின நிகழ்வின் போது ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் அருகில் பாதை போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளட்டுள்ளது.
அதற்கமைய இன்று காலை 08.30 மணியிலிருந்து 12.00 மணிவரை ஜப்பன் மித்ரத்வ வீதி, பாராளுமன்ற அருகில் உள்ள வீதி பொல்துவ சந்தி பாராளுமன்ற வளாக வீதி,பாளான் துல சந்தி வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw5.html
விமல் வீரவன்ஸவின் மனைவியின் கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 05:59.31 AM GMT ]
பொய்யான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சஷி வீரவன்ச 2010ஆம் ஆண்டு, பொய்யான தகவல்களை கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw6.html
வடக்கில் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்த இராணுவத்தினர் தயார் நிலையில்! திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 06:12.31 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் பிரிகேடியர் நண்பர் ஒருவரைக் கொண்டு இந்த சதித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
வடக்கின் சில இராணுவ முகாம்கள் மீது புலிகள் தாக்குவதனைப் போன்று இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் இவ்வாறான சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோத்தபாயவிற்கு நெருக்கமான பிரிகேடியர் ஒருவரின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் இந்த தாக்குதல்களுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
500 இராணுவச் சிப்பாய்களுக்கு இரகசியமாக இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இனவாதத்தை தூண்டி அதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதே மஹிந்த தரப்பின் முயற்சியாகும்.
எனினும் இந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து இராணுவத்தினரே எமக்கு தகவல்களை வழங்கினர். புதிய அரசாங்கத்தை பாதுகாக்க பலரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இராணுவ சூழ்ச்சித்திட்டம் தொடர்பில் அமைச்சரவைக்கு தகவல்கள் வழங்கப்படும் அதன் பின்னர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிங்கள தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் நேற்றிரவு பங்கேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchw7.html
Geen opmerkingen:
Een reactie posten