தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 januari 2015

நாங்கள் மணல் அகழ்வோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: ஈ.பி.டி.பி



பொதுமக்களுடைய நிலங்களில் படையினர் விவசாயம் செய்வது பண்ணைகள் அமைத்து மாடுகளை வளர்ப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 06:52.14 PM GMT ]
தேசிய பாதுகாப்பிற்காகவே யாழ்.குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் உள்ளதாக கூறிக்கொண்டு வலிவடக்கில் பொதுமக்களுடைய சொந்த நிலங்களில் படையினர் விவசாயம் செய்வதும் பண்ணைகள் அமைத்து மாடுகளை வளர்ப்பதும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இன்றைய தினம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொது மக்களுடன் ஊடகவியலாளர்கள் சிலரும் அப்பகுதிக்குள் சென்றிருந்த நிலையில் குறித்த விடயம் அம்பலமாகியிருக்கின்றது
மேற்படி உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பலாலி பகுதிக்குள் மக்களுடைய நிலங்களில் பாரியளவில் தோட்டங்கள் அமைக்கப்பட்டு மரக்கறி செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பலாலி தர்மநகர் பகுதியில் 5 பாரிய மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்பட்டு.அந்த இடத்தில் பெருமளவு மாடுகள் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சொந்த நிலத்தை இழந்து மக்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் கடந்த 25வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கையில் தேசிய பாதுகாப்பு என அடையாளப்படுத்தி இதுவரை காலமும் படையினர் விவசாயம் செய்வதும் கால் நடைவளர்ப்பதுமாக செய்து தங்கள் உற்பத்திகளை பொதுமக்கள் விற்பனை செய்யும் சந் தைகளில் கொண்டு வந்து மிக குறுகிய விலைக்கு அவற்றை விற்று லாபம் தேடிக் கொண்டிருந்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKcht3.html


நாங்கள் மணல் அகழ்வோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: ஈ.பி.டி.பி
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 06:59.15 PM GMT ]
வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியம் மீண்டும் தடை உத்தரவினையும் மீறி மணல் அகழ்வதற்கு முயற்சித்த நிலையில் அப்பகுதி மக்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் அது கைவிடப் பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி காடையர்கள் குடத்தனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த 16ம் திகதி குறித்த மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்வதற்கு பொலிஸார் தடைவிதித்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி மணல் அகழ்வதற்கு மகேஸ்வரி நிதியத்தினர் முயன்றிருந்தனர்.
இந்நிலையில் மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து ஈ.பி.டி.பி காடையர்கள் குடத்தனை ஜே.419 கிராமசேவகர் பிரிவு கிராம அபிவிருத் திச்சங்கத்தின் தலைவர் பரஞ்சோதி ஜீவராசா(வயது43) என்பவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான நபர் பருத்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் மதியம் குறித்த மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்வதற்கு முயற்சித்திருந்தனர்.
இதேவேளை அப்பகுதிக்கு வந்த பொலிஸாரும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.
இதன்போது மகேஸ்வரி நிதியத்தினர் வைத்திருக்கும் அனுமதிப்பத்திரம் சரியானது என பொலிஸர் வாதிட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறான அனுமதியினை தாம் வழங்கவில்லை. என பிரதேச செயலர் தெரிவித்துவிட்டா ர்.
இதனையடுத்து குறித்த அனுமதிப்பத்திரம் முறையற்ற விதத்தில் பெறப்பட்டுள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியதையடுத்து மணல் அகழ்வு தடுக்கப்பட்டுள்ளதுடன் நாளை நாங்கள் மணல் அகழ்வோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என ஈ.பி.டி.பி காடையர்க ள் மக்களை அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKcht4.html

Geen opmerkingen:

Een reactie posten